உச்சத்தில் இருந்தபோதே மோசமான அணுகுமுறையால் புகழை இழந்த 5 நடிகர்கள்.. லிஸ்டில் சிக்கிய ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமாவில் சில சமயம் தன்னுடைய படங்களினால் ரசிகர்களை கவர்ந்த நடிகர்கள் புகழின் உச்சிக்கு சென்று விடுவார்கள். ஆனால் அவர்களுடைய மோசமான அணுகுமுறையால் மிக விரைவில் அந்த புகழை இழக்க நேரிடும். அவ்வாறு உச்சத்தில் இருந்தபோது புகழை இழந்து 5 நடிகர்களை பார்க்கலாம்.

கார்த்திக்: நவரச நாயகன் என்று அழைக்கப்படும் கார்த்திக் ஆரம்பத்தில் நடித்த படங்கள் எல்லாம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கார்த்திக் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக இருந்தார். அப்போது குடிக்கு அடிமையாகி படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது மற்றும் படப்பிடிப்புக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கார்த்திக்குக்கு வாய்ப்பு கொடுக்க தயங்கினார்கள். தற்போது கார்த்திக் மீண்டும் தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

ராமராஜன்: தமிழ் சினிமாவில் 80களின் இறுதியில் முன்னணி நடிகராக இருந்தவர் ராமராஜன். இவர் நடித்த கரகாட்டக்காரன் படம் மிகப்பெரிய ஹிட்டானது. இதை தொடர்ந்து அவரது படங்கள் நல்ல வரவேற்பைப் பெற ராமராஜன் பலரையும் எதிர்த்து பேச ஆரம்பித்தார். சினிமாவில் பல எதிரிகளை சந்தித்ததால் பட வாய்ப்புகளை இழக்க ஆரம்பித்தார்.

வடிவேலு: தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்றாலே அது வைகைப்புயல் வடிவேலு தான். அவருடைய காமெடி இல்லாத இடமே இல்லை என்று கூட சொல்லலாம். அவ்வாறு தமிழ் ரசிகர்களின் மனதில் மிகப் பெரிய இடத்தை பிடித்த வடிவேலு, சிலகாலம் படங்களில் நடிக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டது. படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. இதனால் தயாரிப்பாளர் போட்ட வழக்கு காரணம் வடிவேலுக்கு ரெக்கார்டு விதிக்கப்பட்டது. தற்போது ரெக்கார்ட தடை முடிந்தபிறகு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

சிலம்பரசன்: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சிம்பு. அதன் பிறகு சிம்பு தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படப்பிடிப்பின்போது தயாரிப்பாளருக்கும், சிம்புவுக்கும் இடையே பிரச்சினை நிலவியது. சிம்புவின் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான மாநாடு படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளது.

ராகவா லாரன்ஸ்: தமிழ் சினிமாவில் நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல பரிமாணங்களைக் கொண்டவர் ராகவா லாரன்ஸ். முனி, காஞ்சனா போன்ற பேய் படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். லாரன்ஸ் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு வெளியான அவருடைய படத்தில் மக்கள் சூப்பர் ஸ்டார் ராகவா லாரன்ஸ் என டைட்டில் போட்டிருந்தார். இதனால் பல சிக்கலில் மாட்டினார் ராகவா லாரன்ஸ்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்