கலை என்பதற்கு மொழி என்பது என்றுமே ஒரு தடையில்லை. மொழியே தெரியாமல் ஒரு படத்தை எடுத்து அதை வெற்றிக்கொடுத்த இயக்குனர்கள் இங்கு பலரும் உள்ளனர், அதில் சறுக்கியவர்களும் உள்ளனவர், அவர்கள் குறித்த சிறப்பு தொகுப்பு இதோ…

கே.பாலசந்தர்

இன்று தமிழ் சினிமாவையே ஆளும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையுமே சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது கே.பி தான், இவர் தான் கமலை ஹிந்தியிலும் முன்னணி நடிகராக்கினார், ஆம், அவர் ஹிந்தியில் கமலை வைத்து இயக்கிய Ek Duuje Ke Liye படம் இந்தியளவில் பிரமாண்ட வெற்றியை பெற்ற படம்.

கே.பாக்யராஜ்

பாக்யராஜுன் தனக்கு ஹிந்தியே தெரியாத காலத்தில் பாலிவுட்டில் கால் பதித்து அமிதாப் பச்சனை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றவர், தமிழில் கமல் நடித்த ஒரு கைதியின் டைரி படத்தின் ஹிந்தி ரீமேக்கான Aakhree Raasta படத்தை பாக்யராஜ் ஹிந்தியில் இயக்கினார்.

ஷங்கர்

ஷங்கருடன் பணியாற்ற இன்று பல நடிகர்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர், ஆனால், இவர் முதல்வன் படத்தை ஹிந்தியில் எடுக்க மும்பை முழுவதும் பல நட்சத்திரங்கள் வீட்டிற்கு அழைந்துள்ளார், ஏன், அமீர்கானே கதையை கேட்டு நடிக்க மறுத்துள்ளார், பிறகு அனில்கபூர் தான் முதல்வன் படத்தை நாயக் என்ற பெயரில் ஹிந்தியில் நடித்தார், இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றாலும் தமிழ் அளவிற்கு பெரிய வெற்றி ஹிந்தியில் இல்லை.

முருகதாஸ்

படம் இயக்கிய சில வருடங்களிலேயே இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் அமீர்கானை இயக்கும் வாய்ப்பு முருகதாஸிற்கே கிடைத்தது, இவருக்கும் ஹிந்தி தெரியவில்லை என்றாலும் கஜினி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து மெகா ஹிட் கொடுத்தார்.

கே.எஸ்.ரவிக்குமார்

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கிங் என்றால் கே.எஸ்.ரவிக்குமார் தான், இவரின் நாட்டாமை படம் கூட ஹிந்தியில் ரீமேக் ஆகியுள்ளது, ஆனால், இவரே நேரடியாக ஹிந்தியில் இயக்கிய படம் சஞ்சய் தத் நடித்த போலிஸ்கிரி தான், இப்படம் தமிழில் சூப்பர் ஹிட்டாகிய சாமி படத்தின் ரீமேக், ஆனால், இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

பிரபுதேவாprabhudeva

நடன இயக்குனர், நடிகரை தாண்டி போக்கிரி படத்தின் மூலம் இயக்குனராகவும் கலக்கியவர் பிரபுதேவா, இவர் பாலிவுட்டில் இயக்கிய அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான், அஜய்தேவ்கன் நடிப்பில் இவர் இயக்கிய ஆக்‌ஷன் ஜாக்‌ஷன் படத்தை தவிர.

மணிரத்னம்

மணிரத்னம் நீண்ட வருடங்களாகவே தென்னிந்திய சினிமாவிலேயே தான் இருந்தார், பலரும் அவரை ஹிந்திக்கு அழைக்க நீண்ட வருடங்களுக்கு பிறகு தான் தில்சே(உயிரே) படத்தின் மூலம் ஹிந்தியில் காலடி எடுத்து வைத்தார், இப்படம் ஹிந்தியில் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் சூப்பர் ஹிட் தான்.

கௌதம் மேனன்

கௌதம் மேனனின் தமிழ் படங்களே பாலிவுட் படம் போல் தான் இருக்கும், இவரே பாலிவுட் சென்றால் எப்படியிருக்கும் என்று நினைத்தார்கள், அவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பாலிவுட்டில் ஹிந்தியில் ரீமேக் செய்தார், ஆனால், அப்படம் அங்கு படுதோல்வியை சந்தித்தது.