கழட்டிவிட்ட ராஜமவுலி.. ராம்சரணுடன் RC15 காம்போவில் இணைந்த தமிழ் இயக்குனர்

இந்த ஆண்டு மார்ச் மாதம் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் சுமார் 1100 கோடிக்கு மேல் வசூலைக் குவித்தது. எனவே இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராம்சரண் தன்னுடைய தந்தை சிரஞ்சீவி உடன் சேர்ந்து நடித்து நேற்று வெளியான ஆச்சாரியார் திரைப்படம் போதிய வரவேற்பு இல்லாமல் பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது.

முதலில் பிரபாஸுக்கு தான் ராஜமவுலி லக்கி சாம் ஆக இருந்தார். ஏனென்றால் பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் போன்ற படங்கள் பெரும் சொதப்பலானதுடன் வசூலில் பெரிதும் அடி வாங்கியது.

அப்படித்தான் தற்போது ராம் சரணின் ஆச்சாரியர் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காமல் நெகட்டிவ் கமெண்ட் மட்டுமே குவிந்து கொண்டிருக்கிறது. இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியிடாமல் தெலுங்கில் மட்டுமே வெளியாகி முதல் நாளில் சுமார் 8 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது.

அத்துடன் ராம்சரண் தன்னுடைய 15வது படத்தை இயக்கும் பொறுப்பை இயக்குனர் ஷங்கரிடம் கொடுத்திருக்கிறார். ஷங்கரும் ஏகப்பட்ட வெற்றிப்படங்களை கொடுத்தவர் என்பதால் ராம் சரணுக்கு அவருடைய RC15 படத்தை ஹிட்டடிக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே ராஜமவுலி இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஆர்வம் கொண்டிருக்கும் ராம் சரண் ஆர்ஆர்ஆர் இரண்டாம் பாகத்தை விரைவில் எடுக்க வலியுறுத்துகிறார். ஆனால் தற்போது மகேஷ்பாபு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் ராஜமௌலி, அந்தப் படத்திற்காக பிஸியாக இருக்கிறார்.

எனவே  தன்னுடைய அடுத்த படத்தை எப்படியாவது வெற்றிப் படமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ராம்சரண், ராஜமௌலியை அணுகினாலும் அவருடைய படத்தை இயக்க முடியாத சூழ்நிலையில் ராஜமௌலி இருப்பதால் பிடி கொடுத்து பேசாமல் கழட்டி விட்டுள்ளார்.