Tamil Cinema News | சினிமா செய்திகள்
காப்பி இயக்குனருக்கு விழுந்த அடி.. பிடரியில் தட்டி துரத்திவிட்ட பிரபல நடிகர்
தமிழ் சினிமாவில் காப்பி இயக்குனர் என்றால் மொத்த சினிமா உலகமும் கைகாட்டி சொல்லக்கூடிய நபர் தான் அந்த ஒல்லி. அவர் இதுவரை இயக்கிய மொத்த படங்களும் ஏதாவது ஒரு தமிழ் சினிமாவின் முந்தைய படங்களில் இருந்து உருவப்பட்ட கதையாகத்தான் இருக்கும்.
அந்த வகையில் எவர்கிரீன் இயக்குனர் படத்தின் கதையை பச்சையாக காப்பி எடுத்து இயக்கிய காதல் திரைப்படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. இதனால் உடனடியாக அண்ணன் நடிகரிடம் அதே எவர்கிரீன் இயக்குனரின் படத்தின் கதையை சொல்லி வாய்ப்பு பெற்றார்.
அவரும் அது தெரியாமல் வாய்ப்பு கொடுக்க படம் வெளியான பின்பு இது அதுல்ல என நெட்டிசன்கள் கண்டுபிடிக்கப்பட்டு நொந்து போனார் அண்ணன் நடிகர். அப்பவும் அவரை விடாமல் அடுத்த வாட்டி முன்னணி நடிகர்கள் மூன்று வேடங்களில் நடித்த இரண்டு படங்களின் கலவையாக ஒரு படத்தின் கதையை கூறியிருக்கிறார்.
மீண்டும் அண்ணன் நடிகர் அந்த விவரம் கூட தெரியாமல் ஒல்லி இயக்குனரின் சூழ்ச்சியில் விழுந்துவிட்டார். படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. கூடவே அடுக்கடுக்காக பிரச்சனைகளும் எழுந்தது.
மீண்டும் தமிழ் சினிமாவில் உள்ள கதைகளை காப்பி அடித்தால் தான் மாட்டிக் கொள்கிறோம் என ஹாலிவுட்டிலிருந்து ஆட்டைய போட்டு எடுத்த படம் தான் சமீபத்தில் வெளிவந்த தீபாவளி திரைப்படம். படத்தின் இரண்டாவது பாதியில் வெளிவந்த ஒவ்வொரு காட்சிகளும் ஒவ்வொரு ஆங்கிலப்படத்தில் இருந்து சுடப்பட்டதை நெட்டிசன்கள் கண்டறிந்து ஒல்லி இயக்குனருக்கு சூடு வைத்தனர்.
மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பார்த்து பார்த்து பண்ணி இருப்பதாக சிலாகித்துக் கொண்டார். அந்த பார்த்து பண்ணது இது தானா பாருங்க என நெட்டிசன்கள் அவரை வச்சு செய்துள்ளனர். இதனால் பாலிவுட் பக்கம் சென்று விடலாம் என நினைத்து அங்குள்ள முன்னணி நடிகர் ஒருவரிடம் கதை கூறியுள்ளார்.
அவரும் திறமையான இயக்குனர் என நினைத்து முதலில் பட வாய்ப்பு கொடுத்துள்ளார். அதன்பிறகு இயக்குனரை பற்றி அவரை வைத்து தயாரித்த தயாரிப்பாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
அதன் பிறகு உண்மை தெரிய, இயக்குனரிடம் பிறகு பார்க்கலாம் என்று சொல்லி டாட்டா காட்டிவிட்டாராம்.
இருந்தும் தான் அசிங்கப்பட்டதை வெளியில் சொல்லாமல் கதை வேலையில் பிஸியாக இருப்பதாக கூறி தனது நண்பர்களிடம் பந்தாகாட்டி வருகிறாராம். மீண்டும் அண்ணன் நடிகரை ஏமாற்றலாம் என நினைத்து அடுத்த பட வாய்ப்பு கேட்டுள்ளார்.
அவரும் இனி இந்த பக்கம் வந்தால் அசிங்கமாக கேட்டு விடுவேன் என சொல்லாத குறையாக, வாய்ப்பில்ல ராஜா என வெளியே அனுப்பி விட்டாராம். தற்போது தெலுங்கு பக்கம் செல்ல இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் பெரிய தூரம் இல்லை என்பதால் இயக்குனர் ஃப்ளைட் ஏறும்போதே போன் பண்ணி போட்டு கொடுத்து விடுவார்கள் நம் தயாரிப்பாளர்கள். மேலும் மொத்த சினிமா உலகமும் உஷாராகி விட்டதால் தற்போது திருடனுக்கு தேள் கொட்டியது போல் அமைதியாக உள்ளாராம்.
