Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவின் 5 டாப் நடிகர்கள் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் தியாகராஜ பாகவதர் தொடங்கி தற்போது அறிமுகமாகி உள்ள பல நடிகர்கள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியிலும், தனது படத்திலும் கலகல பேச்சு, கலாட்டா செய்யும் குணம் , தனது துறு துறு பேச்சால் தமிழ் மக்கள் மட்டுமின்றி உலகம் எங்கு வாழும் பல தமிழ் மக்களின் நெஞ்சங்களை பல நடிகர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது உள்ள டாப் 5 நடிகர்கள் யார் தெரியுமா?
முதல் இடத்தில் நடிகர் விஜய்
நடிகர் விஜய் குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார். கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. இவரின் தெறி, புலி, கத்தி, ஜில்லா, தலைவா, துப்பாக்கி, நண்பன், காவலன், குருவி, சிவகாசி, சச்சின் என ஆகிய படங்களில் காமெடியுடன் கலாட்டாவும் செய்து இருப்பார்.
2வது இடத்தில் சிம்பு
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் வாலு, வானம், ஒஸ்தி, தம், போடா போடி படங்களில் பலரை கலாய்த்து சிறப்பாக நடித்து இருப்பார்.
3வது இடத்தில் சூர்யா
நேருக்கு நேர் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகினார். இவரின் ஆதவன், மாஸ், அயன், சில்லுனு ஒரு காதல், கஜினி, வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் சூர்யா சிறப்பாக நடித்து இருப்பார்.
4வது இடத்தில் சிவகார்த்திகேயன்
டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து ஹீரோவாக அறிமுகமாகினார். ரெமோ, ரஜினிமுருகன், காக்கிசட்டை, வருத்தபடாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, எதிர் நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, மனம் கொத்திப்பறவை, மெரினா ஆகிய படங்களில் காமெடி நடிகர் முதல் ஹீரோயின் வரை அனைவரையும் கலாய்த்து படத்தில் கலாட்டா செய்யும் குணம் , தன் துறு துறு பேச்சால் அனைவரையும் எளிதில் கவரும் குணமுடையவர் என்று கூறலாம்.
5வது இடத்தில் ராகவா லாரன்ஸ்
நடன இயக்குனராக இருந்து ஹீரோவாக அறிமுகமாகினார். ஸ்டைல், முனி, பாண்டி, ராஜாதிராஜா, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், காஞ்சனா, சிவலிங்கா, மெட்ட சிவா கெட்ட சிவா என பல படங்களில் தனது துறு துறு பேச்சால் ரசிகர்களை தக்க வைத்துள்ளார்..
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
