தமிழ் சினிமா புது முயற்சிகளோடு எடுத்த 5 படங்கள்.. கமலுக்கு ஏற்பட்ட பெரிய இன்ஸ்பிரேஷன்

இந்தியா சுதந்திரம் ஆவதற்கு முன்பிலிருந்தே தமிழ் சினிமா வளர்ந்து கொண்டிருந்தது.அதற்கு பின்னர் இன்றைய காலகட்டத்தில் பல தொழில்நுட்பங்கள் இருந்தாலும் முதன்முதலாக தமிழ் சினிமாவில் முயற்சியை மேற்கொண்டு எடுக்கப்பட்ட பல திரைப்படங்களை தற்போது பார்க்கலாம்.

காளிதாஸ்: இத்திரைப்படம் வருவதற்கு முன்பாக வந்த திரைப்படங்களில் நடிப்பவர்கள் செய்கையின் மூலமாகவே தங்களது நடிப்பை வெளிப்படுத்துவர். அதன் பின்னர்,1931ஆம் ஆண்டு வெளியான காளிதாஸ் திரைப்படம், தமிழில் முதல் பேசும் திரைப்படமாக அமைந்தது. எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஜி. வெங்கடேசன், டி. பி. ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் நடிகை டி. பி. ராஜலட்சுமி தான் தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி என்ற பெருமைக்குரியவர்.

Also Read : 80-களில் கமலஹாசன் செய்த சாதனை.. இதுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை

அன்னை பூமி: நடிகர் விஜயகாந்த்,ராதா,நளினி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான அன்னை பூமி திரைப்படம் தமிழில் முதல் 3டி திரைப்படமாகும். இத்திரைப்படத்தை இயக்குனர் தியாகராஜன் இயக்கிய நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். 1985ஆம் ஆண்டு அன்னை பூமி படம் வெளியான நிலையில் அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படமாக இடம்பெற்றது.

இனிமே நாங்கதான்: இயக்குனர் வெங்கி பாபு இயக்கத்தில் வெளியான இனிமே நாங்கதான் திரைப்படம் தமிழ் சினிமாவின் முதல் அனிமேஷன் திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்த நிலையில், கவிஞர் வாலி பாடல் வரிகளை எழுதியிருப்பார். 2007ஆம் ஆண்டு வெளியான இனிமே நாங்கதான் திரைப்படம் சிறந்த அனிமேஷன் திரைப்படம் என்ற தேசிய விருதையும் பெற்றிருந்தது.

Also Read : ஆண்டவர் சொல்லி கொடுத்த பாடம்.. மேடையில் மைக் மோகன் பெருமிதம்

சந்திரலேகா: 1948ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான முதல் பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாக சந்திரலேகா திரைப்படம் உள்ளது. எஸ்.என்.வாசன் இயக்கி,தயாரித்த இத்திரைப்படத்தில் நடிகர்கள் எம். கே.ராதா,டி..ஆர். ராஜகுமாரி உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். அன்றைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பவும் இந்த படத்தை கமல் பெருமையாக பேசுவார். அந்த படத்தில் அவருக்கு பெரிய இன்ஸ்பிரேஷன் ஏற்படலாம்

சிவந்த மண்: இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில், சிவாஜி கணேசன்,காஞ்சனா உள்ளிட்டோரின் நடிப்பில் சிவந்தமண் திரைப்படம் வெளியானது. 1969 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் தான், தமிழ் சினிமாவில் முதல் முதலாக வெளிநாடுகளுக்கு சென்று படப்பிடிப்பை எடுத்த படமாகும். இத்திரைப்படத்தில் முக்கியமாக பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Also Read: எம்ஜிஆருக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட விருது.. இதுவரை எந்த நடிகருக்கும் கிடைக்காத கௌரவம்

Next Story

- Advertisement -