தளபதி, SK கிட்ட கொடுத்த துப்பாக்கியை வாங்கி, இவங்கட்ட குடுங்க.. ரசிகர்கள் கொண்டாடும் 5 வளரும் நட்சத்திரங்கள்

Thalapathy Vijay: டாப் ஹீரோக்கள் என்ற லிஸ்ட்டை கணக்கெடுக்காமல், தமிழ் சினிமாவின் அடுத்த அடையாளங்கள் யார் என்ற கேள்வி ஒரு சில வருடங்களாகவே இருந்து வந்தது. இப்போது அந்த இடத்தை நிரப்ப 5 வளர்ந்து வரும் ஹீரோக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

‘உங்களுக்கு முக்கியமான வேல போல, நீங்க போங்க, இங்க நா பாத்துக்கிறேன்.’ சமீப காலமாக தமிழ் சினிமா ரசிகர்களால் அதிக விமர்சனத்தை பெற்றது இந்த வசனம். விஜய் அரசியலுக்கு போன பிறகு சிவகார்த்திகேயன் தான் சினிமாவை பாத்துக்கணுமா என்கின்ற அளவுக்கு இந்த வசனம் கொண்டு போய் விட்டது.

அவன் பொருளை வச்சு அவனையே செய்வது என்பது போல் இப்போ ரசிகர்கள் சமீபத்தில் வெளியான நல்ல படங்கள், நன்றாக நடிக்கும் இளம் ஹீரோக்களை குறிப்பிட்டு அந்த துப்பாக்கியை குடுத்துடுங்க தளபதி என ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள். அந்த 5 ஹீரோக்களை பற்றி பார்க்கலாம்.

ரசிகர்கள் கொண்டாடும் 5 வளரும் நட்சத்திரங்கள்

கவின்: நடிகர் கவினை பொறுத்த வரைக்கும் அவரை குட்டி சிவகார்த்திகேயன் என்றே அவருடைய ரசிகர்கள் கூட்டம் கொண்டாடி வருகிறது. லிப்ட், டாடா போன்ற தொடர் வெற்றி படங்கள் அவரை டாப் ஹீரோக்கள் லிஸ்டில் சேர்த்திருக்கிறது. சமீபத்தில் வெளியான ஸ்டார் படம் கவினுக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தாலும், நெல்சன் தயாரிப்பில் வெளியாக இருக்கும் பிளடி பெக்கர், வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாக்கி கொண்டிருக்கும் மாஸ்க் படங்கள் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

ஹரிஷ் கல்யாண்: நடிகர் ஹரிஷ் கல்யாண் சாக்லேட் பாயாக பெண் ரசிகைகள் மனதில் நின்று விட்டார். கடந்த இரண்டு வருடத்தில் அவருடைய கதை தேர்வு, அவரை ஒரு வளர்ந்து வரும் கதாநாயகனாக மாற்றி இருக்கிறது. கடந்த வருடம் வெளியான பார்க்கிங், சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படங்கள் பெரிய வெற்றி படங்களாக அமைந்திருக்கிறது.

தினேஷ்: நடிகர் தினேஷ் எதார்த்த நடிப்புக்கு சொந்தக்காரர். அட்டகத்தி போன்ற கதை களத்தில் அவரை தவிர வேறு எந்த நடிகராலும் நடித்திருக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை. ஜே பேபி படத்தில் ஊர்வசிக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பர். சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்தில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

அசோக் செல்வன்: நடிகர் அசோக் செல்வனுக்கு ஓ மை கடவுளே, போர் தொழில் போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. அதே போன்று ப்ளூ ஸ்டார் படம் அசோக் செல்வனை வளர்ந்து வரும் ஹீரோக்கள் லிஸ்டில் சேர்த்திருக்கிறது.

மணிகண்டன்: குட் நைட் படத்தில் தன்னுடைய எதார்த்த நடிப்பில் பட்டையை கிளப்பி ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திர அந்தஸ்தில் இருக்கிறார் நடிகர் மணிகண்டன். அதை தொடர்ந்து வெளியான லவ்வர் படமும் அவருக்கு நல்ல வெற்றி படமாக அமைந்தது.

மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய படங்கள்

- Advertisement -spot_img

Trending News