fbpx
Connect with us

Cinemapettai

ஐந்து நடிகர்களை மட்டும் வைத்து ஒப்பேற்றி கொண்டிருக்கும் தமிழ் சினிமா.. கூடாரம் காலியாக வாய்ப்பு அதிகம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஐந்து நடிகர்களை மட்டும் வைத்து ஒப்பேற்றி கொண்டிருக்கும் தமிழ் சினிமா.. கூடாரம் காலியாக வாய்ப்பு அதிகம்

சினிமா உலகை பொறுத்தவரை எப்போதுமே ஒவ்வொரு காலகட்டத்தில் ஒரு சில நடிகர்களை மட்டுமே நம்பி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் தமிழ் சினிமாவில் மிகவும் மோசம். வெறும் இரண்டு நடிகர்களை மட்டும் வைத்துக்கொண்டு குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒப்பேற்றி கொண்டிருக்கிறார்கள்.

பி யு சின்னப்பா-தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல் ஆகியோர்களுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமா விஜய், அஜித்தை நம்பி கொண்டிருக்கிறது. இவர்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவை ஆட்சி செய்யப் போவது யார் என்பதில் தான் பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. எந்த ஒரு நடிகரையும் நம்பி பெரிய அளவில் பணம் போட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

அஜித் விஜய்க்கு பிறகு பெரிய அளவு தயாரிப்புச் செலவை பண்ணும் அளவுக்கு ஹீரோக்கள் உருவாகவில்லை என்று சொல்வதைவிட உருவாக்கப்படவில்லை என்று சொல்லலாம். அதற்காகவே ஒரு குறிப்பிட்ட சில நடிகர்களை வலுக்கட்டாயமாக இவர்தான் உங்கள் அடுத்த ஹீரோ என்பதை போல் மார்க்கெட்டிங் செய்து வருகிறார்கள்.

விஜய் அஜித்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஓரளவு மார்க்கெட் உள்ள நடிகர்கள் என்றால் சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் சேதுபதி மட்டும்தான். இதிலும் சூர்யா சமீபகாலமாக ஒரு வெற்றி கூட கிடைக்காமல் தடுமாறி வருகிறார். இருந்தாலும் அவருக்கு ஒரு நல்ல மார்க்கெட் உள்ளது.

ஆனால் சிவகார்த்திகேயனுக்கு என்டர்டெயின்மென்ட் படங்களைத் தவிர மற்ற எதுவுமே ஓடுவதில்லை. தனுஷ்க்கு வெற்றிமாறன் கூட்டணியில் வரும் படங்கள் மட்டுமே பெரிய வெற்றியை பெறுகிறது. சிம்பு தனுஷ் என்ற போட்டி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் சிம்பு அந்த போட்டியில் இருந்து எப்போதே விலகி விட்டார்.

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில்வெளிவந்த படங்கள் அனைத்துமே அட்டர் பிளாப். விஜய்சேதுபதியை நம்பலாம் என்று பார்த்தால் ஹீரோவாக நடிப்பதை விட வில்லனாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் தற்போது அனைவரின் பார்வையும் சிவகார்த்திகேயன் மீது திரும்பியுள்ளது. இவர்தான் அடுத்த பெரிய ஹீரோ என்பதை போல் வேண்டுமென்றே டிவி சேனல்கள் மக்களின் தலையில் மிளகாய் அரைத்து வருகின்றனர்.

இந்த லிஸ்டில் விக்ரம் பற்றி சொல்லாமல் விட்டதற்கு நிறைய காரணம் உள்ளது. விக்ரமின் மகன் நடிக்க வந்து விட்டதால் மட்டுமல்ல. விக்ரமின் சமீபகால படங்கள் அனைத்துமே படுதோல்வி அடைந்தது. அடுத்ததாக அவர் கோப்ரா படத்தையே பெரிதும் நம்பியுள்ளார். கோப்ரா படத்தின் வெற்றியே விக்ரமின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Continue Reading
To Top