சினிமா ரசிகர்கள் தற்போது சினிமாவை ஏதோ ஒரு பொழுதுப்போக்கிற்காக மட்டும் பார்ப்பது இல்லை. ஒரு டெக்னிஷியனுக்காக கூட படம் பார்க்கும் நிலைமை வந்துவிட்டது, இசை என்றாலே பாடல்கள் மட்டும் தான் என இருக்க, பின்னணி இசைக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு என ஒரு சில படங்களே உணர்த்துகின்றது, அதன் தொகுப்பு தான் இது…

புன்னகை மன்னன்

இளையராஜா இசையமைத்தாலே ஹிட் தான் என்ற நிலையில் காலங்கள் கடந்தும் நம் நினைவில் இருக்கும் ஒரு தீம் மியூஸிக் தான் புன்னகை மன்னன், அந்த படத்தின் பெயரை சொன்னாலே நம் நினைவிற்கு வருவது அந்த புல்லாங்குழல் இசை தான்.

பாட்ஷா

தேனிசை தென்றல் தேவா சூப்பர் ஸ்டார் படங்களுக்கு இசையமைத்த காலக்கட்டம், அண்ணாமலை படத்தில் அசத்தியிருந்தாலும், பாட்ஷா தான் ட்ரெண்ட் செட்டர் என்றே சொல்லலாம், ஒரு ஆங்கிலப்படத்தின் காப்பி இசையும் இதில் இடம்பெறும், அதையும் தாண்டி ரஜினி நடந்து வரும் போது பின்னணியில் வரும் அந்த தீம் இப்போதும் மெய்சிலிர்க்க வைக்கும்.

படையப்பா

ரகுமான் என்றாலே மெலடி தான் என இருந்த காலக்கட்டத்தில் முத்து படம் கிடைத்தது, ஆனால், அந்த படத்தில் ரகுமான் இசை மற்றும் படையப்பா படத்தில் இவர் ரஜினிக்காக போட்ட தீம் மியூஸிக் இன்றும் ஹைலேட் தான்.

பில்லா

தீம் என்று டீன் ஏஜ் இளைஞர்களுக்கு தெரிந்ததே இந்த காலக்கட்டம் தான். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பின்னணி இசைக்காகவே படம் பார்க்க வைத்தது பில்லாவாக தான் இருக்கும். அஜித்தின் ஸ்டைலிஷ் லுக்கிற்கு யுவனின் பின்னணி இசை வேரு லெவலில் அமைந்திருக்கும்.

துப்பாக்கி

முதன் முதலாக விஜய்க்கு ஒரு ஆக்‌ஷன் படத்திற்கு இசையமைக்கின்றார் ஹாரிஸ். என்ன செய்வார் என்று காத்திருந்த நிலையில் ட்ரைலரிலேயே அசத்திவிட்டார். அதிலும் அந்த புகையிலிருந்து விஜய் வரும் போது தீம் மியூஸிக் போட்டிருப்பார் பாருங்க….ரசிகர்கள் விசில் சத்தம் விண்ணைத்தொடும்.

காக்க காக்க

ஹாரிஸ்-கௌதம் என்றாலே ஒரு ஸ்பார்க் கிரியேட் ஆகும். அந்த வகையில் காக்க காக்க படத்தில் சூர்யாவிற்கு இல்லை வில்லனுக்கு இவர் அமைத்த தீம் மியூஸிக் பலராலும் ரசிக்கப்பட்டது.

காதல் கொண்டேன்

ஹாரிஸ்-கௌதம் எப்படியோ அதேபோல் தான் செல்வா-யுவன் கூட்டணி. காதல் கொண்டேன் படத்தில் இவர்கள் மேஜிக்கில் வெளியே வந்த தீம் மியூஸிக் இன்றும் காதுகளுக்கு இதம் தான்.

மங்காத்தா

தமிழ்நாட்டில் உள்ள பாதி ஜனத்தொகையின் ரிங்டோன் இந்த இசை தான். அத்தனை பிரபலமானது இந்த தீம் மியூஸிக். அதிலும் அஜித்தை காட்டும் போதெல்லாம் வேறு வேறு மாடுலேஷனில் இந்த இசை அதிரும்.

கத்தி

அனிருத் வளர்ந்து வந்த காலக்கட்டம், எடுத்த எடுப்பிலேயே விஜய் போல் முன்னணி நடிகர்களுக்கான படத்திற்கு இசை. டீசரிலேயே கத்தி தீம் என்று ஒன்றை தெறிக்கவிட்டார், விஜய் ரசிகர்களின் ஆல் டைம் பேவரட்.

வேலையில்லா பட்டதாரி

வேலையில்லா பட்டதாரி தீம் மியூஸிக் எந்த அளவிற்கு பிரபலம் என்றால் தனுஷ் தன் கம்பெனி லோகோவிற்கே இந்த இசையை தான் பயன்படுத்தி வருகிறார். அந்த இசையுடன் கம்பெனி லோகோ வரும் போது வரும் பாருங்க ஒரு சத்தம், நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

மன்மதன்

ஹீரோவிற்கும், இசையமைப்பாளர்களுக்கும் ஒரு வேவ் லெந்த் இருக்கும். அதில் சிம்பு-யுவன் விஷயத்தில் பல மடங்கு வேலை செய்யும். அப்படி ஒரு அற்புதமான தீம் மியூஸிக்ஸ் அமைந்த படம் தான் மன்மதன்.

ஜிகர்தண்டா

ஜிகர்தண்டா படம் மியூஸிக்கல் கேங்ஸ்டர் என்ற கோட் லைனில் தான் வெளிவந்ததே. அதற்கு ஏற்றார் போலவே அசால்ட் சேதுவிற்கு சந்தோஷ் நாராயணன் பல பரிமாணங்களில் இசையமைத்து கலக்கியிருப்பார்.

மயக்கம் என்ன

செல்வராகவன் யாருடன் கூட்டணி அமைத்தாலும் கலக்கல் இசையை வாங்கிவிடுவார், அப்படி ஜி.வி.பிரகாஷுடன் இவர் அமைத்த கூட்டணி தான் மயக்கம் என்ன, காதல், மோதல், வலி, தோல்வி, வெற்றி என அனைத்து பயணங்களுக்கும் ஜி.வியின் இசையே டானிக்காக இருந்தது.

இதுபோல் பல படங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட சில படங்களை தான் நாங்கள் இங்கு கூறியிருக்கின்றோம். உங்களுக்கு தெரிந்த படங்களை கீழே கமெண்டில் குறிப்பிடலாம்.