செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

கோலிவுட் TO ஹாலிவுட்.. தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? ரசிகர்கள் பிரமிப்பு!

தமிழ் சினிமாவில் இருந்து இந்தியிலும் ஹாலிவுட்டிலும் கால் பதித்து, ஹாலிவுட் தமிழன் என்று அழைக்கப்படும் தனுஷின் எத்தனை கோடியில் சொத்து வைத்திருக்கிறார் என்பதை இதில் பார்ப்போம்.

தனது தந்தை கஸ்தூரி ராஜாவின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தனுஷ். அடுத்து, தன் அண்ணன் செல்வராகவனின் காதல் கொண்டேன் படத்தில் ஆண்டி ஹீரோவாக நடித்து அசத்தினார்.

இதையடுத்து, புதுப்பேட்டை, ஆடுகளம் படத்தில் நடித்திருந்தார். ஆடுகளம் படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த தனுஷுக்கு தேசிய விருது கிடைத்தது. ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாராவை திருமணம் செய்த தனுஷூக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு தன் காதல் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவாகவும் தங்கள் 18 ஆண்டுகள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும் இருவருமே பரஸ்பரமாக அறிக்கை வெளியிட்டனர்.

இதையடுத்து, தனுஷ் படங்களில் பிஸியானார், அவர் இயக்கி நடித்த ராயன் படம் சமீபத்தில் வெளியாகி 100 கோடி வசூல் குவித்தது. இதையடுத்து, இட்லி கடை என்ற படத்தை இயக்கி வருகிறார், இப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

தமிழ் சினிமாவில் 2 தேசிய விருது வென்ற தனுஷூக்கு தமிழ், தெலுங்கு, இந்தியில் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், ஹாலுவுட்டிலும் சில படங்களில் நடித்து ஹாலிவுட் தமிழர் என்று அழைக்கப்படுகிறார். அவர் நானும் ரவுடிதான், எதிர் நீச்சல் உள்ளிட்ட பல படங்களையும் சொந்தமாக தயாரித்துள்ளார்.

தற்போது அமரன் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அடுத்து பிரமாண்ட படத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தை அன்பு செழியன் தயாரிக்கிறார். இந்த நிலையில் ஒரு படத்தில் நடிக்க தனுஷ் ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் தகவல் வெளியாகிறது.

தனுஷின் மொத்த சொத்து மதிப்பு!

சமீபத்தில் சென்னை போயஸ் கார்டனில் ரூ.150 கோடியில் பிரமாண்ட வீடு கட்டிய தனுஷ், சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவில் படங்களில் தயாரிப்பதில் முதலீடு செய்து வருகிறார். இவருக்கு ரூ.45 லட்சம் மதிப்பில் ஜாகுவார் காரும், ரூ.75 லட்சம் மதிப்பிலான போர்ட் மஸ்டங் காரும், ரூ.1.65 கோடி மதிப்பிலான ஆடி காரும், ரூ.3.40 கோடி மதிப்பிலான பெண்ட்லி காண்டினெண்டல் காரும் ரூ.7 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் காரும், ரூ.1 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ஓவர், பென்ஸ் உள்ளிட்ட பல கார்களையும் வைத்திருக்கிறார். எனவே இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.210 கோடிக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.

சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், வசன கர்த்தா, பாடகர், நடன கலைஞர் என பன்முகங்களை கொண்டிருக்கும் தனுஷ், இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிப்பதுடன், நிலவுக்கு என்னடி கோபம் என்ற படத்தில் தன் அக்கா மகனை வைத்து இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News