tamil-cinema-theme-music

தமிழ் சினிமா என்றாலே வதந்திகளுக்கு பஞ்சம் இருக்காது. இஷ்டத்திற்கு பல வதந்திகள் சுற்றும், ஆனால், இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த வதந்திகளை பல வருடமாக நாமே நம்பி தான் இருப்போம், அப்படிப்பட்ட ரூமர்ஸ் சில இதோ உங்களுக்காக…

ரூமர் (Rumour) என்றாலே முதலில் இந்த டாப்பிக்கிற்குள் சிக்குவது கலைஞானி கமல்ஹாசன் தான், இவருக்கும் ஆஸ்கருக்கும் அப்படி ஒரு ஏக பொருத்தம், ஆளவந்தான் படத்திற்கு ஆஸ்கரே கிடைத்துவிட்டது என்பது போல் பேசினார்கள், இதில் சிறப்பம்சம் என்னவென்றால் கமலில் சில படங்கள் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பியது உண்மை தான்.

ஆனால், அந்த படத்திற்கு ஆஸ்கர் கிடைக்காததற்கு நம்ம ஆட்கள் ஒரு கதை சொல்வார்கள் பாருங்கள், பூசணிக்காயை சோற்றில் மறைத்தால் பரவாயில்லை, ஒரு தோட்டத்தையே மறைத்துவிடுவார்கள், தேவர் மகன் படம் ஆஸ்கருக்கு சென்ற போது கமல், சிவாஜி இறந்த போது மொட்டையடிக்கவில்லை அதனால் தான் ஆஸ்கர் கொடுக்கவில்லை, இந்தியன் படத்தில் கமல் ரூபாய் நோட்டில் கப்பல் விட்டார் அதனால் தான் ஆஸ்கர் கொடுக்கவில்லை (நம்ம ஊர் காசுல கப்பல் விட்டா அமெரிக்கா காரணுக்கு என்ன வந்துச்சு?) இப்படி பல கதை கட்டினார்கள்.

அடுத்து சூப்பர் ஸ்டாரையும் விட்டு வைக்கவில்லை, தளபதி படத்தின் மொத்தம் இரண்டு கிளைமேக்ஸ், மலையாள தளபதியில் ரஜினி தான் மம்முட்டி கதாபாத்திரத்தில் நடித்தார் என்று இஷ்டத்திற்கு அளந்துவிட்டார்கள், இதை மணிரத்னமே ஓகே கண்மணி வந்த போது தான் மறுத்து பேசினார். அதுவரை பலரும் தளபதி படத்தில் இரண்டு கிளைமேக்ஸ் இருந்ததாகவே கூறி வந்தனர்.

அதேபோல் ஷங்கர் படம் வருகிறது என்றாலே பல கதையாசிரியர்கள் உருவாகி விடுவார்கள், இஷ்டத்திற்கு இவர்களாவே ஒரு கதையை எழுதி இது தான் இந்த படத்தின் கதை என்று ஸ்பில்பெர்க்கே அசந்து போகும் படி கூறுவார்கள், அந்த வகையில் அந்நியன் படம் வருவதற்கு முன் விக்ரம் கழுத்தில் ஒரு சிப் ஒன்றை மாற்றிவிடுவார்கள், அதை வைத்துக்கொண்டு இவர் செய்யும் கலாட்டா தான் கதை என்று ஒரு கதைகட்டி விட்டனர்.

சரி படத்தில் தான் இப்படி என்றால் படப்பிடிப்பு சம்மந்தாமாக சில வதந்திகள் பரவும், இதுதான் மிகவும் கிளாமரான வதந்தியாக தான் இருக்கும், நடிகர் ஷாம் படப்பிடிப்பில் ஒரு பிரபல நடிகைக்கு முத்தம் கொடுக்கும் போது அவர் உதட்டை கடித்து விட்டார், அந்த நடிகை கோபத்தில் அறைந்துவிட்டார் என கூற, ஷாமே ஒரு பேட்டியில் இதுக்குறித்து கேட்ட போது விழுந்து விழுந்து சிரித்தார்.

இது போதாது என்று விருது விழாக்கள் வரை ஒரு சில வதந்திகள் இருக்கும், அதிலும் சிம்பு என்றால் சொல்லவா வேண்டும், சிங்கப்பூரில் நடந்து ஒரு விருது விழாவில் சிம்புவும், ஜெயம் ரவியும் ஒரு கிளப்பில் அடித்து கொண்டதாக ஒரு செய்தி பரவியது, பிறகு சக நடிகர்கள் தான் இவர்களை விலக்கிவிட்டதாகவும் கூறப்பட்டது, இந்த வதந்தி பேமஸ் என்றாலும் இது வதந்தி தானா என்பதிலும் ஒரு சந்தேகம் உள்ளது தான், சிம்பு அல்லவா நடந்தாலும் நடந்திருக்கலாம்.

இப்படியெல்லாம் வதந்திகள் வந்து சென்றாலும் சரத்குமார் ஜேம்ஸ் பாண்ட் செலெக்‌ஷன் சென்று திரும்பியவர் என ஒன்றை கிளப்பிவிட்டார்கள் பாருங்கள், நோ கமெண்ட்ஸ்.