Tamil Cinema News | சினிமா செய்திகள்
தர்பார் நடத்திய வேட்டை.. வெடிக்காமல் போன பட்டாஸ்
ஒரே சமயத்தில் வெளியான உச்ச நடிகர் படமும், ஒல்லி நடிகர் படத்தின் வசூல் நிலவரங்களை பற்றிய செய்திதான் கோடம்பாக்கத்தின் ஒரே டாப்பிக்.
சும்மா கிழி கிழி என்று ரவுடிகளை கிழிப்பதற்காக மும்பை போலீஸ் அதிகாரியாக வந்த உச்ச நடிகரின் படம் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. இதில் ஹீரோவுக்கே பெரும் தொகை சென்றுவிட்டது. மற்றதுதான் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்களுக்கு கிடைத்திருக்கும். இந்நிலையில் படத்தின் வசூல் கணக்கை ஆள் ஆளுக்கு கொளுத்தி போட தயாரிப்பு நிறுவனமே அதிரடியாக அறிவித்தது.
தர்பார் படத்தை ரூ.25 கோடி ரூபாய் குறைத்துதான் விற்றார்களாம். விநியோகஸ்தர்கள் விடுமுறை நாட்கள் என்பதாலும் வேறு படங்கள் போட்டிக்கு இல்லை என்பதாலும் சரிகட்டிவிடலாம் என்று வாங்கினார்களாம்.
ஆனால் நினைத்த மாதிரியே லாபம் கிடைத்துவிட்டதாம். அதனால் தயாரிப்பாளர் பெரு மூச்சி விட்டுள்ளார். தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தையும் நல்ல விலைக்கு விற்றுவிட்டார் அதனால் ஹேப்பியாக இருக்கிறார் தயாரிப்பாளர். ஆனால், ஆசையோடு வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு இன்னும் லாபம் வரவில்லையாம்.
தர்பார் படத்தின் வசூல் விநியோகிஸ்தர்களுக்கு பெரிய லாபமாம் ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் தயாரிப்பாளருக்கும் லாபம் கிடைத்திருக்கிறது ஆனால் எதிர்பார்த்த அளவை விட சற்று கம்மிதானாம். இன்னும் தியேட்டரில் நன்றாக ஓடி கொண்டிருப்பதால் நிறைய வரும் என எதிர்பார்கிறார்கள்.
ஆனால் தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தின் வசூல் தயாரிப்பாளருக்கு லாபம் விநியோகிஸ்தருக்கு லாபம் தரவில்லையாம். இப்படி இரண்டு படங்களும் உல்டாவாக மாறியிருக்கிறதே என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
