Connect with us
boomerang-movie

தமிழ் சினிமாவின் அடுத்த இரண்டாம் பாகம்… கழுகு 2

News | செய்திகள்

தமிழ் சினிமாவின் அடுத்த இரண்டாம் பாகம்… கழுகு 2

2012ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் கழுகு. இத்திரைப்படத்தினை சத்யசிவா இயக்கியிருந்தார். கிருஷ்ணா குலசேகரன், கருணாஸ், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாப்பாத்தரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் மூலமாக பிந்து மாதவி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். படம் வசூல் வெற்றியை பெறவில்லை என்றாலும், நல்ல விமர்சனத்தை பெற்றது.

கோலிவுட்டில் இதுவரை தொடப்படாத கதையாக கழுகு படம் அமைந்தது. மலையில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்பவர்களின் பிணங்களை உயிரை பணயம் வைத்து எடுத்து கொடுக்கும் நாயகனுக்கும், அதே பகுதியில் தேயிலை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணுக்கும் உண்டாகும் காதலை அம்மக்களின் வாழ்வியலோடு இயக்குனர் சொல்லி இருப்பார்.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை படக்குழு எடுக்க தயாராகி விட்டது. 6 ஆண்டுகள் கழித்து உருவாக இருக்கும் இப்படத்திற்கு கழுகு 2 எனப் பெயரிடப்பட்டுள்ளது. கிருஷ்ணா, பிந்து மாதவியே ஜோடியாக நடிக்க, முக்கிய வேடத்தில் காளி வெங்கட் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் மூணாறில் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் படத்துக்கும் யுவன் சங்கர் ராஜாவே இசையமைக்கிறார். இப்படத்தை திருப்பூர் பி.ஏ.கிருஷ்ணன் தயாரிக்கிறார். பல வெற்றி படங்கள் இரண்டாம் பாகத்திற்கு தயாராகி வரும் நிலையில், கழுகு 2வும் அப்பட்டியலில் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top