Connect with us
Cinemapettai

Cinemapettai

tamil actress

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவின் மக்கள் செல்வி யார் தெரியுமா?

நடிகையர் திலகம் சாவித்ரியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த கீர்த்தி சுரேஷிற்கு கோலிவுட் வட்டாரத்தில் புது அடைமொழி உருவாகி இருக்கிறது. விக்ரம் பிரபு நாயகியாக இது என்ன மாயம் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து, விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட ஸ்டார் நாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். தொடரி படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த கீர்த்திக்கு பெரும் எதிர்ப்பலைகளே நிலவியது. மீம் கிரியேட்டர்களுக்கு ட்ரோல் ராணியாக மாறினார்.

அப்படத்தை தொடர்ந்து, அவர் சமூக வலைத்தளத்தில் பலராலும் விமர்சிக்கப்பட்டார். அதிகம் கலாய் வாங்கிய தொடரி படத்தால் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் நடிகையர் திலகம்.

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டது. தெலுங்கில் மகாநடி என்ற பெயரிலும், தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும் சமீபத்தில் திரைக்கு வந்தது. நாக் அஸ்வின் படத்தை இயக்கி இருந்தார். சமந்தா, பிரகாஷ் ராஜ், ஷாலினி பாண்டே, விஜய் தேவரகொண்டா ஆகியோர் முக்கிய வேடத்தை ஏற்று இருந்தனர். அவரின் வாழ்வு முதல் இறப்பு வரை கச்சிதமாக படமாக்கப்பட்டு இருக்கும் படம் பலதரப்பில் பாராட்டுக்களை பெற்றது. பிரபலங்கள் அனைவரும் சாவித்ரியை, கீர்த்தி உருவில் காண முடிந்தது என பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் கீர்த்திக்கு மக்கள் செல்வி என்ற அடைமொழி உருவாக்கப்பட்டு வைரலாகி இருக்கிறது. முன்னதாக நடிகைகளில் நயன்தாராவிற்கு மட்டுமே லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் ரசிகர்களால் கொடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, படத்தை பார்த்த தளபதி விஜய் அச்சு அசல் சாவித்ரி அம்மா போலவே கீர்த்தி நடித்திருப்பதாக பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top