புது பிசினசில் உமி நடிகை

உச்சநடிகருக்கு ஜோடியாக எந்திர மனிதன் படத்தில் நடித்து வரும் உமி நடிகை இப்போது புதிதாக ரியல் எஸ்டேட் பிசினசில் குதித்துள்ளார். இங்குள்ள ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்திற்கும், லண்டனில் உள்ள கட்டுமான நிறுவனத்துக்கும் தூதராக செயல்பட்டு காரியத்தை கச்சிதமாக முடித்திருக்கிறார். இங்குள்ளவர்கள் லண்டனில் இடம், வீடு வாங்கவும், அங்குள்ளவர்கள் இங்கு இடம், வீடு வாங்கவும் இவரை அணுகலாம் என்கிறார்கள். டீலிங் முடிந்த பிறகு கணிசமான தொகை கமிஷனாக நடிகைக்கு கிடைக்குமாம். இதனால் லண்டனுக்கு அடிக்கடி பறந்து டிஷ்கசன் பண்ணிக் கொண்டிருக்கிறார் என கோடம்பாக்கம் முழுக்க ஒரே பேச்சாக கிடக்கிறது.

Comments

comments