பரிதாப நிலையில் தமிழ் சினிமா.. ஒருவருக்கு மட்டுமே அள்ளிக் கொடுக்கும் வாய்ப்பு

இப்பொழுது தமிழ் சினிமாவில் பரிதாபநிலையில் சில மியூசிக் டைரக்டர் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள் இப்ப எந்த ஒரு பட வாய்ப்பு இல்லாததால் வாய்ப்புகளை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இன்று வரை புது புது இசையமைப்பாளர்கள் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு என்பது அரிதிலும் அரிதாக தான் கிடைக்கிறது.

சமிபகாலமாக தமிழ் சினிமால எங்க பார்த்தாலும் அனிருத்தின் இசை தான்அலை அடிக்கிறது. இதனாலோ என்னவோ சில முன்னணி மியூசிக் டைரக்டர் ஓரங்கட்டப்பட்டு வருகிறார்கள்.

அனிருத்தின் இவரின் இசையில் வெளிவந்த டாக்டர், பீஸ்ட், காத்துவாக்குல இரண்டு காத வெளியாகி வெற்றி நடை போடுகிறது. இதனை அடுத்து எஸ் கேயின் டான், கமலஹாசனின் இந்தியன் 2 இவரே தான் இசையமைப்இக்கிறார். இது போன்ற பெரிய படங்கள் எல்லாமே இவர் கையில் தான். இப்போது இவருக்கு தமிழ் கூட போர் அடித்து விட்டது என ஹிந்தி பக்கம் போக திட்டமிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் இவர் பெரிய படங்கள் எல்லாம் கையில் வைத்திருப்பதால் முன்னணி இசை அமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், தமன், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன் போன்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் படத்தில் எப்படியும் ஹிட்டாகி விடும் என்பதால் எல்லோரும் இவரையே நாடுகின்றனர் அதனால்தான் எப்போதும் தமிழ் சினிமாவில் இவரது கொடி பறக்கிறது. அவரும் கூட தற்போது பாலிவுட் பக்கம் சென்றுவிடலாம் என்று மும்பையில் சுற்றி வருகிறாராம்.

இதனாலேயே ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த இசை அமைப்பாளர்கள் நிலைமை கேள்விக்குறியாக இருக்கிறது. அதனால்  தமிழ் சினிமா ஒருவரை மட்டும் நம்பாமல் மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தால் சினிமாவில் நிறைய மாற்றங்கள் உருவாகும் என்பது தான் அனைவரின் கருத்து.

Next Story

- Advertisement -