Tamil Nadu | தமிழ் நாடு
கொரானாவால் முக்காடு போட்ட தமிழ் சினிமா.. 1000 கோடிக்கு மேல் காலியான பரிதாபம்
கொரானா பிரச்சனையால் உலகம் முழுவதும் பல்வேறு வகையான தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மிகவும் செல்வாக்குமிக்க தொழிலாக விளங்கி வருவது சினிமா தொழில் தான். தினமும் கோடிக்கணக்கில் பணம் புழங்கும் இடமாகவும் அது திகழ்கிறது.
அதுமட்டுமல்லாமல் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் 200 கோடி 300 கோடி வசூலை ஒரே வாரத்தில் பெற்ற அசத்தும் வியாபாரம். இதனால் செல்வச் செழிப்பில் தலைக்கணம் எடுத்து ஆடி வந்த பலரின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழ் சினிமா வருடந்தோறும் சுமார் 1000 கோடி வரை சர்வ சாதாரணமாக பணம் புழங்கும் இடமாக கருதப்படுகிறது. ஆனால் தற்போது படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் கடன் வாங்கி படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் வட்டி மேல் வட்டி ஏறிக்கொண்டே செல்கிறது.
இதனால் மாஸ்டர், சூரரைப்போற்று படங்களின் வெளியீட்டுத் தேதிகள் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இருந்தாலும் சினிமா உலகம் பழைய நிலைக்கு மீண்டு வர குறைந்தது மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை ஆகும் எனவும் அதுவரை வட்டியை கட்டி சமாளிக்க முடியாது எனவும் தலையில் துண்டைப் போட்டு அலைகிறார்கள் தயாரிப்பாளர்கள்.
அதுமட்டுமல்லாமல் சம்மரில் மட்டும் கிட்டத்தட்ட 500 கோடிகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் வசூலாகுமாம். ஆனால் அது தற்போது தடைபட்டுள்ளது. இதனால் தான்தான் பெரிய ஆள் என தெரிந்த பலரும் தற்போது கடனாளியாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சினிமாவில் நடிகர் நடிகைகள் எப்போதோ செட்டிலாகி விட்டனர். ஆனால் சினிமாவை தொழிலாக நம்பி தினக் கூலிக்கு வேலைக்கு செல்பவர்களின் நிலைமை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
