தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த 4 கன்னட நடிகர்கள்.. உங்க ஃபேவரிட் யார்!

தமிழ் சினிமாவிற்கு கன்னட திரையுலகம் தந்த 4 பொக்கிஷமான முன்னணி நட்சத்திரங்களை இன்றுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கிக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கர்நாடகாவில் பிறந்து தற்போது தமிழில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் பெங்களூரில் ஒரு போக்குவரத்து நடத்துவதாக பணிபுரிந்து, பிறகு சென்னை திரும்பி தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

தொடக்க காலத்தில் வில்லனாகவும், சிறு சிறு கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருந்த ரஜினிகாந்தின், ஸ்டைல் மற்றும் நடிப்பை கண்ட கமலஹாசன் ரஜினிகாந்தை கதாநாயகனாக நடிப்பதற்கு இயக்குனர்களிடம் சிபாரிசு செய்துள்ளார். அதன் பிறகு ரஜினிகாந்த்துக்கு எக்கச்சக்கமான படவாய்ப்புகள் கிடைத்து. ரஜினி இதன் காரணமாகவே பல மேடைகளில் கமலுக்கு நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ரஜினி சூப்பர் ஸ்டாராக 71 வயதிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அடுத்தது கர்நாடகாவில் பிறந்து தமிழ் ரசிகர்களிடம் சிறந்த நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தென்படுபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். ஒரு சில நடிகர்கள் மட்டுமே தாங்கள் நடிக்கும் படத்திற்கு குரல் கொடுப்பார்கள். பிரகாஷ்ராஜ் அவர் நடிக்கும் கன்னட, தமிழ் தெலுங்கு, ஹிந்தி, இங்கிலீஷ் உள்ளிட்ட படங்களுக்கெல்லாம் அவரே குரல் கொடுப்பது அவருடைய தனி சிறப்பாக கருதப்படுகிறது. இவர் தொடக்கத்தில் வில்லனாகவே நிறைய படங்களில் நடித்து அதன் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், கதாநாயகனாகவும் எந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகராக திகழ்ந்தார்.

கர்நாடக தந்த அடுத்த தமிழ் நடிகர் முரளி. பிரபல இயக்குனர் சித்தலிங்கையா அவர்களின் மகனாக அறியப்பட்ட முரளி, பெரும்பாலான தமிழ் படங்களில் மட்டுமே நடித்து தமிழ் ரசிகர்களின் காதல் மன்னனாக விளங்கினார். சுமார் இருபது வருடங்களாக கன்னட திரைப்படங்களை அவருடைய தந்தையின் இயக்கத்தில் டப் செய்து ஏராளமான தமிழ் படங்களை தந்தவர்.

அதிலும் குறிப்பாக கன்னடக் திரைப்படத்தை தமிழில் முரளி நடிப்பில் பூவிலங்கு என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. நடிகர் முரளி அந்த காலத்தில் கல்லூரி மாணவனாக நிறைய படங்களில் நடித்து, இளைஞர்களின் மனதைக் கவர்ந்தவர். அடுத்தது மைசூரில் பிறந்த ஆக்சன் கிங் அர்ஜுன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்தவர். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடக்கத்தில் ஸ்டன்ட்மேன் மற்றும் சின்னச்சின்ன கதாபாத்திரத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்த அர்ஜுன், அதன் பிறகு ஆக்ஷன் படங்களில் தன்னுடைய அசத்தலான நடிப்பால் ஆக்சன் கிங் என்று ரசிகர்களால் பெருமைபடுத்தப்பட்டார். இவ்வாறு கர்நாடகாவில் இருந்து தமிழ் சினிமா நடிகர்கராகவே மாறிய இந்த நான்கு நடிகர்களும் இன்று வரை ரசிகர்களுக்கு பிடித்தமான பிரபலங்களாக உள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்