ஓஹோ கொரியன் படங்களை காப்பியடிப்பதன் சங்கதி இதுதானா.? கமல் படமே சுட்ட மூவி தான்

Tamil Cinema: தமிழில் கொரியன் மொழியில் இருந்து காப்பியடித்த பழைய படங்கள் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. இப்பொழுது கூட நிறைய படங்களை அங்கே இருந்து தான் காப்பியடிக்கிறார்கள். அந்தப் படங்களின் கதைகளை காப்பியடிப்பதற்கு வலுவான காரணத்தையும் சொல்லிக் கொள்கின்றனர்.

அதிலும் கொடுமை என்னவென்றால் கமலின் சூப்பர் ஹிட் படமும் சுட்ட படம் தான் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் அஜித்தின் 62 ஆவது படமான விடாமுயற்சி படத்தையும் கூட கொரியன் படத்தின் காப்பியாக தான் எடுக்கப் போகிறார்கள் என்ற பேச்சுக்கள் அடிபடுகிறது.

Also Read: வார்த்தையே இல்லாமல் நவரசத்தையும் கொட்டி ஸ்கோர் செய்த கமல்.. ஒரே ஷாட்டில் கொடுத்த 12 எக்ஸ்பிரஷன்ஸ்

ஏனென்றால் இயக்குனர் மகிழ்திருமேனியின் கதை, தயாரிப்பு நிறுவனமான லைக்காவிற்கு திருப்தி அளிக்காததால் ஏற்கனவே ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருக்கும் கொரியன் படத்தின் கதையை வைத்து விடாமுயற்சி எடுத்து விடலாம் என்ற முடிவில் இருக்கின்றனர்.

இந்த அளவிற்கு கொரியன் படத்தின் கதையில் அப்படி என்ன இருக்கிறது என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதற்கு முக்கிய காரணம் தமிழ் மொழி படங்களை போலவே அங்கே உள்ள படங்களும் இருக்கும். தமிழ் சினிமாவிற்கு இருக்கக்கூடிய ஃபார்மட் அப்படியே கொரியன் படத்திலும் இருக்கிறது.

Also Read: இந்தியன் 2 வில் வேண்டா வெறுப்பா கமிட் ஆனா உதயநிதி.. ஒத்த படத்தின் மூலமா அடிக்கப் போகும் பெத்த லாபம்

ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என எல்லாமும் கலந்து ஒரு கமர்சியல் படமாக இருக்கும். அதேபோல அங்கு உள்ள கலாச்சாரமும் தமிழ்நாட்டின் கலாச்சாரமும் ஒன்றாக தான் இருக்குமாம், அதனால்தான் அங்குள்ள படங்களை சுடுகின்றனர். கமல் நடித்த பாபநாசம் படம் கூட அங்கே சுட்டது தான்.

கிரைம் திரில்லர் பாணியில் வெளியான இந்த படத்தில் தமிழில் கமலஹாசனும், மலையாளத்தில் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சூப்பர் ஹிட் ஆக்கினர். இந்த படம் கொடுத்த தைரியம் தான் அடுத்தடுத்து கொரியன் கதைகளை சுடுவதற்கு வழி வகுக்கிறது.

Also Read: மாஸ் ஹீரோவை அமெரிக்காவில் மடக்கிய கமல்.. அடுத்த தயாரிப்புக்கு ரெடியாகும் ராஜ்கமல் நிறுவனம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்