fbpx
Connect with us

Cinemapettai

சினிமா வாய்ப்பு தேடி ரோடு ரோடாக அலைந்த…நடிகர்கள் சூரி..முனிஸ்ராஜ்..அப்புக்குட்டி….

suri_Cinemapettai

News | செய்திகள்

சினிமா வாய்ப்பு தேடி ரோடு ரோடாக அலைந்த…நடிகர்கள் சூரி..முனிஸ்ராஜ்..அப்புக்குட்டி….

சென்னை கே.கே.நகர் காமராஜர் சாலை பகுதியில் ’ கவிஞர் கிச்சன்” என்ற பெயரில் உணவகம் நடத்தி வரும் பாடலாசிரியர் ஜெயம் கொண்டான் அவர்களை நாம் இன்று சந்தித்தோம். அவர்கள் தனது திரையுலக அனுபவங்களை லவ்டே உடன் பகிந்து கொண்டார்.


நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் பாடல்கள் எழுதிக்கொண்டு எனது வருமானத்திற்காகவும், சினிமாவில் சாதிக்க போராடும் இளைஞர்களுக்கு உதவுவதற்காகவும் சொந்தமாக நான் கவிஞர் கிச்சன் உணவகத்தை நடத்தி வருகிறேன்.

சினிமாவில் “வேடப்பன்”, “தங்கப்பாம்பு”, “ஒரு சந்திப்பில்”, “சோக்கு சுந்தரம்”,“திருப்புகழ்”,“இந்திரசேனா”,“கொத்தனார்” உள்ளிட்ட பல தமிழ் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளேன்.

பொதுமக்கள் தியேட்டர்க்கு சென்று படம் பார்த்து ரசிப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் திருட்டு விசிடிகளால் தள்ளாடி வரும் தமிழ் சினிமாவை வாழ வைக்கும் விதமாக, திரைப்படங்களை தியேட்டரில் பார்த்து விட்டு அந்த சினிமா டிக்கெட்டுகளுடன் வரும் ரசிகர்களுக்கு அவர்கள் சாப்பிடும் உணவில் 10% தள்ளுபடி செய்வதாக அறிவித்து வியாபாரமும் செய்து வருகிறேன், இதனால் பலர் சலுகை விலையில் உணவு சாப்பிட்டு வருகிறார்கள்.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சினிமாவில் நடிக்க வேண்டுமென வரும் இளைஞர்களுக்கு எனது கடையில் இருக்க இடம்,உணவு,உடை, சினிமா, தொடர்பான புத்தகம், சினிமா தொடர்பான தகவல் அளிப்பது என என்னால் முடிந்த வரை பல சினிமா உதவிகளை செய்கிறேன்.

சினிமா என்பது கடல் மாதிரி தினசரி ஏராளமான அலைகள் வந்து கொண்டே இருக்கும், அலைக்கு ஏற்ப எதிர்த்து நீச்சல் அடித்து முன்னேறி செல்பவன் மட்டுமே சினிமாவில் வெற்றி பெறுகிறான்.முயற்சி செய்யாமல் இருப்பவனை கடல் வெளியே தூக்கி ஏறிந்து  விடும்.. எனது கடையில் பணிபுரிந்து ஏராளமானவர்கள் இன்று முன்னணி இயக்குனரிடம் பணிபுரிந்து வருகின்றனர்.

தனது கடையில் தற்போதைய நடிகர்கள்,சூரி,யோகிபாபு, அப்புக்குட்டி,முனிஸ்ராஜ், சினிமா வாய்ப்பிற்காக அலைந்த போது என்னிடம் தான் மலிவுவிலையில் உணவு சாப்பிட்டார்கள்… உணவுக்கு காசு இல்லாமல் இருந்த சமயத்தில் கூட நான் அவர்களுக்கு பல்வேறு தன்னம்பிக்கை கொடுத்தேன். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தான் 4 பேரும் தற்போது சினிமா சாதித்துள்ளனர்.இவர்களின் போராட்டங்களை நான் கண்ணால் பார்த்தவன்.இன்று இவர்கள் நல்ல நிலையில் உள்ளனர்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்து இனி இவர்களைப்போல் கஷ்ட படக்கூடாது என்பதற்காகவே நான் பல்வேறு உதவிகளை இன்று வரையும் செய்து வருகிறேன். வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு நான் கூறும் முதல் வார்த்தை  நீ முதலில் உன்னை தயார்படுத்திக் கொள், எப்போதும் உனது

தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடக்கூடாது என்பதற்காகவும், மனம் தளர்ந்து விடக்கூடாது  என்பதற்காக நான் என்னால் முடிந்த பல்வேறு உதவிகளை இன்றும் செய்து வருவதாக ஜெயம் கொண்டான் நம்மிடம் தெரிவித்தார்.

தன்னை தேடிவரும் சினிமா நண்பர்களுக்கு வயிற்றுக்கும், உணவு அளித்து விட்டு அவர்களது செவிக்கு விருந்து அளிக்கும் ஜெயம் கொண்டான் சிறந்த மனிதர் தான்…..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top