tamil-cinema-combination

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் தங்களுக்கு என ஒரு கூட்டணியை விரும்புவார்கள். காலத்தின் கட்டாயம் அவர்கள் பிரிந்து தனித்தனியாக உச்சத்தை எட்டியிருந்தாலும் இவர்கள் இணைந்தால் எப்படியிருக்கும் என்ற கனவு ரசிகரின் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.

அப்படி ஒரு கூட்டணி தான் ராஜா-மணிரத்னம், மணிரத்னத்தில் கிளாஸ் படைப்புக்களுக்கு இசையால் ஸ்கிரீப்ட் எழுதி அதற்கு உயிர் கொடுத்தவர் ராஜா, பகல் நிலவில் ஆரம்பித்த இந்த கூட்டணி அஞ்சலி வரை பல அதிரடி ஹிட்ஸை கொடுத்தது.

இவர்கள் கூட்டணியில் வெளிவந்த தளபதி வட இந்தியர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது, ராஜா இந்த படத்திற்கு மும்பையில் இசையமைத்து கொண்டிருக்கும் போது ஒரு பாலிவுட் கலைஞர் இனி இவரை இங்கு இசையமைக்க கூட்டி வராதீர்கள், எங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும் என கூறினாராம்.

இப்படத்தில் இடம்பெற்ற ‘ராக்கமா கையத்தட்டு’ பாடல் இன்றும் உலக அளவில் சிறந்த பத்து பாடல்கள் என்ற லிஸ்டில் இடம்பிடித்துள்ளது, அதேபோல் மணிரத்னம் இயக்கிய நாயகன் படம் டைம்ஸ் பத்திரிக்கையில் சிறந்த 100 படங்கள் லிஸ்டில் இடம்பெற்றது. நாயகன் இளையராஜாவிற்கு 400வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல் பல பெருமைகளை கொண்ட இந்த கூட்டணி காலப்போக்கில் பிரிந்து இருதுருவங்களாக பலவெற்றிகளை கொடுத்தாலும், இவர்கள் திரையில் மீண்டும் இணைய வேண்டும் என்பதே பலரின் விருப்பம், ஆனால், காலம் எப்போதும் ஒரு வகையில் இவர்களை இணைத்தே வைத்திருக்கின்றது, இருவருக்குமே இன்று தான் பிறந்தநாள். சினி உலகம் சார்பாக இந்த சினிமா மேதைகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.