Entertainment | பொழுதுபோக்கு
இதுவரைக்கும் நமக்குத் தெரியாமல் படத்தை இயக்கிய 11 நடிகர்கள்.. லிஸ்டில் இடம் பிடித்த ஒரே 1 பெண் இயக்குனர்
தமிழ்சினிமாவில் ரசிகர்களிடம் பிரபலமாக இருந்த நடிகர்கள் ஒருகாலத்தில் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து பல படங்கள் இயக்கியுள்ளனர். தற்போது இவர்கள் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகின்றனர். இவர்கள் என்னென்ன படங்களை இயக்கியுள்ளனர் யாரை வைத்து இயக்கியுள்ளனர் என்பதை பார்ப்போம்.
சத்யராஜ்

villadhi-villain
சத்யராஜ் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் பல படங்கள் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்து இயக்கிய திரைப்படம் வில்லாதி வில்லன். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை
சரத்குமார்

thalaimagan-cinemapettai
சரத் குமார் இயக்கத்தில் நடிப்பில் வெளியான நூறாவது படம் தலைமகன். நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தை இவர்தான் இயக்கியிருந்தார்.
சோ ராமசாமி

muhammadu bin thuglak
முகமது பின் துக்ளக் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
மேஜர் சுந்தர்ராஜன்

andha oru nimidam
அந்த ஒரு நிமிடம் என்ற படத்தை கமலஹாசனை வைத்து இயக்கியிருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் பல படங்கள் இயக்கியுள்ளார். அதில் ஒரு சில படங்கள் 400 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்துள்ளது.
ஸ்ரீபிரியா

sri priya
சாந்தி முகூர்த்தம், பாளையங்கோட்டை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் நடித்த பல படங்கள் நடித்து ரசிகர்களிடம் பெயர் பெற்றவர்.
ஈ ராமதாஸ்

e ramdoss
ஈ ராமதாஸ் நான்கு படங்களை இயக்கியுள்ளார். ஆயிரம் பூக்கள் மலரட்டும், ராஜா ராஜாதான், ராவணன், வாழ்க ஜனநாயகம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான காக்கி சட்டை படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
உதயமகேஷ்

uday mahesh
ஆபிஸ் சீரியலில் மேனேஜராக நடித்திருப்பார் உதயமகேஷ். நாளை, சக்கர வியூகம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
எஸ் எஸ் ஸ்டான்லி

ss stanly
எஸ் எஸ் ஸ்டான்லி ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தை இயக்கி உள்ளார் இது 90 காலகட்டத்தில் அனைவருக்கும் பிடித்த படம் அதன்பிறகு மெர்குரி பூக்கள், கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
ஆர் என் ஆர் மனோகர்

rnr manohar
ஆர் என் ஆர் மனோகர் வில்லன் ரோல் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் மாசிலாமணி, வேலூர் மாவட்டம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
விஜய் ஆதிராஜ்

vijay adhiraj
புத்தகம் என்ற படத்தில் ஆர்யா தம்பி மோகன் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இப்படத்தை தான் விஜய் ஆதிராஜ் இயக்கியுள்ளார்.
மேஜர் கௌதம்

gowtham major sundarrajan
மேஜர் சுந்தரராஜன் பையன்தான் கண்ணுல காச காட்டப்பா என்ற படத்தை இயக்கியுள்ளார்.
வேணு அரவிந்த்

venu arvind
ஜெயராம் வைத்து சபாஷ் சரியான போட்டி என்ற படத்தை இயக்கியுள்ளார்.
