Connect with us
boomerang-movie

குரூப் டான்ஸர் திடீர் மரணம் – தல அஜித்தின் அக்கறையை கண்டு நெகிழ்ந்து போன பிற டான்சர்கள்.

ajith siva

Entertainment | பொழுதுபோக்கு

குரூப் டான்ஸர் திடீர் மரணம் – தல அஜித்தின் அக்கறையை கண்டு நெகிழ்ந்து போன பிற டான்சர்கள்.

தல அஜித்தை பொறுத்தவரை சிறந்த ஹீரோ என்பதை விட சிறந்த மனிதர் என்றே பெயர் எடுத்தவர். அவர் அவ்வப்பொழுது செய்யும் சிறு உதவி, கட்டம் அக்கறை உடனே வெளியே தெரிய வாராவிடிலும், சில நாட்கள் கழித்து மீடியாவுக்கு எப்படியோ கசிந்து விடும். அத்தகைய சம்பவம் தான் இது.

விஸ்வாசம்

‘படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ள படக்குழு, தற்பொழுது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு புனேவில் நடத்தி வந்துள்ளனர். பாடலுக்கான சில காட்சிகளை மட்டும் படமாக்கி உள்ளனர்.

அப்போது குரூப் டான்ஸர்கள் நடனமாடும் காட்சியைப் படமாக்கிக் வந்துள்ளனர். திடீரென்று குரூப் டான்ஸர் சரவணன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். வாந்தி எடுத்த அவரின் நிலை மோசமாகியிருக்கிறது.

உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி விட்டு , மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள். உடல் உப்பாதைகளுக்கான டெஸ்ட்கள் எடுக்கும் சமயத்தில், அவருடைய உயிர் பிரிந்துவிட்டது. அஜித்துக்கு தகவல் தெரியவர உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்.

சரவணன் உயிரிழந்தது தெரிந்தவுடன் பிரேதப் பரிசோதனை முடியும் வரை மருத்துவமனையிலே இருந்திருக்கிறார் . அதுமட்டுமன்றி அவரின் குடும்பத்தினரிடமும் பேசி உடலை புனேவிலிருந்து மும்பைக்கு அனுப்பி, அங்கிருந்து சென்னைக்கு கொண்டு செல்லும் வரை முழுக்க தொலைபேசி வாயிலாக எவ்வித தடங்கலும் ஏற்படாதவாறு பேசிக் கொண்டே இருந்திருக்கிறார். மேலும் அருகில் இருந்த டான்ஸர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறியிருக்கிறார்.

இந்த தகவல் தற்பொழுது குரூப் டான்சர் ஒருவர் வாயிலாக தெரியவந்துள்ளது.

SOURCE- THE HINDU

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top