Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
கல்யாணம் ஆனாலும் கவர்ச்சி காட்டுவதில் தயக்கம் இல்லை.. அடாவடி பண்ணும் 36 வயது நடிகை
விரைவில் திருமணம் செய்ய இருக்கும் பிரபல நடிகை ஒருவர் கல்யாணத்திற்கு பிறகும் கவர்ச்சி காட்டுவதில் தயக்கம் இல்லை என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சினிமாவில் பிரபல நாயகியாக வலம் வரும் அந்த ஸ்வீட் நடிகை, விரைவில் திருமணம் செய்ய உள்ளது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
அது என்னமோ தெரியவில்லை சினிமா நடிகைகளை திருமணம் செய்வதற்காகவே தொழிலதிபர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்கக் கூடாது என சத்தியம் வாங்கிக் கொண்டுதான் பல தொழில் அதிபர்கள் அவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள்.
ஆனால் திருமணத்திற்கு பிறகு நடிக்க ஆசைப்பட்டு பல நடிகைகள் வாழ்க்கையை இழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதில் நம்ம ஸ்வீட் நடிகையும் விரைவில் சேர்ந்து விடுவார் என்கிறார்கள் சினிமா வாசிகள்.
தற்போது நடிப்பதை போலவே திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் எந்தவித தயக்கமும் இல்லை என கூறியுள்ளது அவரது வருங்கால கணவரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

gossip
