முதன்முதலில் ‘A’ சர்டிபிகேட் வாங்கிய தமிழ் படம்.. அதுவும் யார் நடித்தது தெரியுமா?

ஆதி காலத்திலிருந்து இந்த காலம் வரைக்கும் சினிமாவில் காதல் காட்சி மற்றும் ரொமான்ஸ் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் படத்தில் எது இருக்கிறதோ இல்லையோ ரொமான்ஸ் காட்சிகள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்.

சமீப காலமாக சினிமாவில் வரும் படங்கள் அனைத்துமே ஏ சர்டிபிகேட் உடன் தான் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் முதன்முதலில் ஏ சர்டிபிகேட் வாங்கிய படம் எந்த படம் யார் நடித்தது என்பதை பார்ப்போம்.

தமிழ் சினிமாவின் புரட்சித்தலைவர் என அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். சினிமாவில் தனக்கென இடம் பிடித்து பல கோடி ரசிகர்களை தன் கைக்குள் வைத்திருந்தார் என்று தான் கூற வேண்டும். இவர் நடிப்பில் வெளியாகும் படங்களை பார்ப்பதற்கு அன்றைய காலத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் எம்ஜிஆர் நடித்துள்ளார் என்றாலே கூட்டம்கூட்டமாக அவரது நடிப்பை பார்க்க பல ரசிகர்கள் சென்றுள்ளனர்.

எம்ஜிஆர் படத்தில் நல்ல வசனங்கள், சண்டை காட்சிகள் மற்றும் காதல் காட்சிகள் என அனைத்திலும் கொடிகட்டி பறந்தார் என்றுதான் கூறவேண்டும். ஆனால் இவர் நடிப்பில் வெளியான மர்மயோகி என்ற படத்திற்கு தான் தமிழிலேயே முதல் முறையாக ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.

marmayogi
marmayogi

அதற்கு காரணம் இப்படத்தில் பேய் போன்ற உருவங்கள் நிறைய வருவதால் இப்படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். ஆனால் அன்றைய காலத்தில் ஏ சர்டிபிகேட் கொடுத்தாலே எந்த ஒரு ரசிகரும் படத்திற்கு செல்லமாட்டார்கள்.

ஆனால் ஏ சர்டிபிகேட்லேயே நிறைய அர்த்தங்கள் உள்ளன. அருவருக்கத்தக்க காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்தாலும் ஏ சர்டிபிகேட் கொடுப்பது வழக்கம் அதேபோல் ஓவர் ரொமான்ஸ் காட்சிகள்யிருந்தாலும் இயர் சர்டிபிகேட் தணிக்கை குழுவால் கொடுக்கப்படும்.

ஆனால் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான மர்மயோகி படத்திற்கு தான் சினிமாவில் முதல்முறையாக ஏ சர்டிபிகேட் வாங்கியுள்ளது. இது பலருக்கும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்