Tamil Cinema News | சினிமா செய்திகள்
தரமான படங்களுக்கு கிடைக்கப்போகும் ஜாக்பாட்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
தமிழ் சினிமாவில் கதை கருத்துடன் கூடிய நல்ல திரைப்படங்களை எடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் அச்சப்படுகின்றனர். காரணம் தற்போதைய ரசிகர்கள் மாஸ் காட்சிகள் இல்லாமல் திரைப்படங்களை ரசிப்பதே இல்லை. ஆகையால் அனைவரும் சிறந்த படங்களைத் தயாரிப்பதை விட்டுவிட்டு வியாபார ரீதியாக சென்றுவிட்டனர்.
இதனால் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதாகி வருகிறது. இந்நிலையில் இந்த குறையை போக்க தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது. அதாவது தரமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களுக்கு தமிழகஅரசு ரூ. 7 லட்சம் வரை மானியம் வழங்குகிறோம் என அறிவித்துள்ளது. இதனால் சிறு தயாரிப்பாளர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.
இதற்கான விண்ணப்பங்களுடன் ரூ.100 சேர்த்து நவம்பர் 29-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. கடந்த 2015,16,17 ஆகிய ஆண்டுகளில் வெளியான படங்கள் மட்டுமே இப்போதைக்கு அனுப்ப முடியும் என தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மேலும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து தென்னிந்திய திரைப்படங்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என தென்னிந்திய சம்மேளன தலைவர் ஆர்.கே. செல்வமணி தலைமையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
