பொதுவாக நமது நடிகர்கள் திரையில் வில்லன் மற்றும் அடியாட்களை புரட்டி எடுத்து தான் பார்த்திருப்போம். ஆனால், சில தமிழ் நடிகர்களை பொது இடத்தில் வைத்தே தாக்கிய சம்பவங்களும், தாக்க முயலும் போது அவர்கள் தப்பித்து ஓடிய சம்பவங்களும் கூட பல நடந்தேறியுள்ளது.

விஷால்!

நடிகர் சங்க தேர்தலின் போது இவரை சிலர் தாக்கினர். இதனால் இவர் மயங்கி கீழே விழுந்தார். பிறகு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார்.

சிவகார்த்திகேயன்!

மதுரையில் ஒரு கல்லூரி விழாவில் பங்கேற்க சென்ற போது, விமான நிலையத்தில் சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் சிலர் தாக்கினர்.

நயன்தாரா!

2014-ல் நயன்தாராவின் வீடு புகுந்து சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் அவர் சிறியளவில் காயமடைந்தார்.

விஜய்!

ரசிகர்களை பார்த்து பேச மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீட்டிங் ஒன்றில் விஜயை தாக்க சில மர்ம நபர்கள் முயன்றனர். அங்கிருந்து அவர் தப்பித்து சென்றுவிட்டார்.

விஜயகாந்த்!

ஒருமுறை பொது இடத்தில் கூட்ட நெரிசலின் போது, விஜயகாந்து ஆதரவாளர் ஒருவரே கைதவறி விஜயகாந்தை அடித்துவிட்டார்.

வடிவேல்!

விஜயகாந்தை எதிர்த்து சரமாரியாக தேர்தல் நேரத்தில் பேசி வந்த வடிவேலுவின் வீடு புகுந்து விஜயகாந்த் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

ஸ்ருதிஹாசன்!

மூன்று திரைப்படத்தின் போது ஏற்பட சில பிரச்சனைகளால் இவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

கோபிநாத்!

தொகுப்பாளர், நடிகர் கோபிநாத் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தின் முன் போலீசாரால் லத்தி சார்ஜ் நடத்தப்பட்டு தாக்கப்பட்டார்.