நான் மட்டும் தக்காளி தொக்கா.. லோகேஷ்க்கு போட்டியாக 8 கோடியை வீசி கெத்து காட்டிய நெல்சன்

தமிழ் சினிமா நடிகர்கள் கோடம்பாக்கம், விருகம்பாக்கம் என்று வீடு வாங்கி தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது போயஸ் கார்டனில் வீடு வாங்குவதை மிகப் பெருமையாகக் கருதி வருகின்றனர். அப்படி தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் போயஸ் கார்டனில் வீடு வாங்குவதற்காக முந்தி அடித்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில் ஏற்கனவே ரஜினி, தனுஷ் ஆகியோர் போயஸ் கார்டனில் வீடு வாங்கி அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர்.

ரஜினி, தனுஷ் தாங்கள் வசிக்கும் போயஸ் கார்டனை விட்டு வெளியில் வரும் ஐடியாவில் இல்லை. அப்படி அவர்கள் தங்கியிருக்கும் போயஸ் கார்டனுக்கு வெளியில் ஏதாவது பிளாட்டோ. வீடோ விலைக்கு வந்தால் அதை விடாமல் அவர்கள் வாங்கிக்கொள்கிறார்கள். யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் அவர்களே அந்த இடங்களையும் வாங்கிக் கொண்டு விடுகின்றனர்.

இப்படியே போயஸ் கார்டனின் பாதி இடங்கள் ரஜினி மற்றும் தனுஷ்க்கு சொந்தமாகி கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் அவர்களை தொடர்ந்து இப்பொழுது போயஸ் கார்டனில் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஒரு வீடு வாங்கி இருக்கின்றனர். விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகியோர் நாங்களும் போயஸ் கார்டன் வாசிகள் என்று நிரூபிப்பதற்காக அங்கேயே வீடு வாங்கி அவர்களும் அங்கேயே செட்டில் ஆக இருக்கின்றனர்.

இந்த சமயத்தில் லோகேஷ் கனகராஜ் அங்கே ஒரு வீடு வாங்க உள்ளதாக கூறி இருந்தார். தற்போது அவரும் போயஸ் கார்டனில் தனக்கான வீட்டை வாங்கி இருக்கிறார். இப்படி தொடர்ந்து திரை பிரபலங்கள் பலரும் போயஸ் கார்டனை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முன்னால் ரஜினிகாந்த், ஜெயலலிதா போன்றோரின் வீடு மட்டுமே அங்கு இருந்தது.

தற்போது பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் வீடு அங்கு இருக்கிறது. இதற்கு மத்தியில் தற்போது வளர்ந்து வரக்கூடிய இயக்குனராக கூடிய நெல்சன் திலீப் குமாரும் 8 கோடி ரூபாய்க்கு ஒரு பிளாட் வாங்கி இருக்கிறார். ஆனால் இவர் வாங்கியது போயஸ் கார்டனில் இல்லை.

அடையாறில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 8 கோடி ரூபாய்க்கு ஒரு பிளாட்டை வாங்கி நானும் உங்களுக்கு சளைத்தவன் அல்ல , இரண்டு மூன்று படங்கள் பண்ணி இருந்தாலும் நன்றாக கல்லா கட்டி இருக்கிறது. நானும் பணக்காரன் தான் என்று நிரூபிக்கும் படி ஒரு ஆடம்பர பிளாட்டை வாங்கி ஜம்மென்று தங்க இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்