திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

மகனுக்காக கோடிகளை வாரி இறைக்கும் நெப்போலியன்.. ஜப்பானில் முகாமிட்ட பிரபலங்கள், ஹோட்டல் அறையில் இவ்வளவு வசதிகளா.!

Nepoleon: நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ் அக்ஷயா திருமணம் நாளை நடைபெற இருக்கிறது. ஜப்பானில் நடைபெற இருக்கும் இந்த கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ் பிரபலங்கள் அனைவரும் இப்போது அங்கு குழுமி இருக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பே ஜப்பானுக்கு சென்று விட்ட நெப்போலியன் அங்கு ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார். முன்னதாக தனுஷ் தமிழ்நாட்டுக்கு விமானத்தில் வரமுடியாத காரணத்தால் அவர் நிச்சயதார்த்தத்தை வீடியோ கால் மூலம் நடத்தி இருந்தார்.

அதையடுத்து திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்த நிலையில் மணமக்கள் நேற்று போட்டோ சூட் செய்திருந்தனர். அந்த வீடியோவும் போட்டோக்களும் கூட இப்போது வைரலாகி ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் நெப்போலியன் மகன் திருமணத்திற்கு வந்துள்ள பிரபலங்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை தடபுடலாக செய்து இருக்கிறார். அவர்களுக்கு எந்த குறையும் வரக்கூடாது என சகல வசதிகளும் கொண்ட ஹோட்டலில் தங்க வைத்துள்ளார்.

மகனுக்காக கோடிகளை வாரி இறைக்கும் நெப்போலியன்

அதன்படி இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக குஷ்பூ, மீனா, ராதிகா, கலா மாஸ்டர், பாண்டியராஜன், சரத்குமார் என பல பிரபலங்கள் ஜப்பானுக்கு சென்றுள்ளனர். அவர்களை விமான நிலையத்தில் வரவேற்ற நெப்போலியன் டோக்கியோ சிட்டியில் உள்ள ஹில்டன் என்ற ஹோட்டலில் தங்க வைத்துள்ளார்.

அந்த ஹோட்டலில் தங்குவதற்கான ஒரு இரவு வாடகை மட்டுமே 50,000 என்கின்றனர். மேலும் அங்கு இருக்கும் அறையில் பல்வேறு வசதிகள் இருக்கிறது. அதன்படி மாஸ்டர் பெட்ரூம், பெரிய பால்கனி, மேக்கப் போடுவதற்கான தனி அறை, மேக்கப் சாதனங்களை வைத்துக் கொள்வதற்கான டேபிள் என ரூம் ரிச் ஆக இருக்கிறதாம்.

தற்போது அங்கு இருக்கும் பிரபலங்கள் திருமணம் நடக்கும் இடத்திற்கு செல்ல தனி வாகனங்களும் தயார் நிலையில் இருக்கிறது. மேலும் இன்று நடைபெற இருக்கும் சங்கீத் நிகழ்ச்சியை கலா மாஸ்டர் தான் நடத்த இருக்கிறார். அதற்கான ரிகர்சல் வேலைகளுக்காக ஒரு ஹால் புக் செய்யப்பட்டு இருக்கிறது.

இப்படியாக நெப்போலியன் தன் மூத்த மகனின் திருமணத்தை எதிர்பார்க்காத அளவிற்கு கோலாகலமாக நடத்த இருக்கிறார். இதற்காக அவர் கோடி கணக்கில் செலவு செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News