fbpx
Connect with us

Cinemapettai

எனக்கு ஏன் செகண்ட் ஹீரோயின் சான்ஸ்? இவ்வளோ கவர்ச்சி காட்டுறனே என புலம்பும் நடிகை

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எனக்கு ஏன் செகண்ட் ஹீரோயின் சான்ஸ்? இவ்வளோ கவர்ச்சி காட்டுறனே என புலம்பும் நடிகை

தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் நாயகியாக வலம் வந்தவர் அந்த நம்பர் பட நாயகி. ஆரம்பமே அசத்தல் என்பதைப்போல சித்தூ நடிகருடன் சேர்ந்து பட்டையை கிளப்பினார். அதன்பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்தார்.

ஆனால் 90% செகண்ட் ஹீரோயின் தான். முக்கால்வாசி படங்களில் நடிகையை கொஞ்சநேரம் காண்பித்துவிட்டு கொன்றுவிடும் போல் காட்சிகளே தொடர்ந்து அமைந்தது. இதனால் வெறுப்பில் இருந்த நடிகை கிளாமருக்கு பச்சைக் கொடி காட்டினார்.

இருந்தும் மெயின் ஹீரோயின் வாய்ப்பு வந்தபாடில்லை. தன்னுடைய உடம்பை பற்றி கவலைப்படாமல் கண்டதையும் தின்று உப்பிவிட்டார். விளைவு, தற்போது இரண்டாவது ஹீரோயின் சான்ஸ் கூட வருவதில்லையாம். இதுபற்றி நடன சூறாவளியிடம் புலம்பியும் உள்ளாராம்.

அவரோ, சேப் இல்லாமல் ஹீரோயின் உடல் வைத்திருந்தால் யாரு சான்ஸ் கொடுப்பாங்க என பதிலுக்கு கலாய்த்து விட்டாராம். நல்லா ஜிம்முக்கு போயி சேப் கொண்டு வா எனவும் அட்வைஸ் செய்தாராம். (மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துடீங்களா).

இருந்தும் நாயகி விடாமல் உப்பி போன உடம்பிலேயே கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி பார்த்துள்ளார். அவராலேயே அதை சகித்துக் கொள்ள முடியவில்லையாம். தற்போது உடலை இழைத்த நாயகிகளிடம் அட்வைஸ் கேட்டு உடல் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.

இதற்கு பிரம்மாண்ட பட நாயகிதான் டிப்ஸ் கொடுக்கிறாராம். முக்கியமாக நாயகிக்கு வாயை கட்டி இருந்தால் எதுவும் நல்லதே எனவும் மறைமுகமாக அவரது நண்பர்களும் கலாய்த்து உள்ளார்களாம். திறமையான நடிகையாக இருந்தாலும் கிளாமர் இல்லையென்றால் சினிமாவில் இருந்து ஒதுங்கி விடுவார்கள் என்பதை புரிந்து கொண்டு தற்போது முழு மூச்சுடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.

குண்டாக இருந்தாலும் கவர்ச்சி காட்டுவேன் என அடம் பிடிக்கிறாராம் நாயகி. நீங்க காட்டுவீங்க, யாரு பார்க்கிறது என கோலிவுட் முதல் பாலிவுட் வரை கிண்டலடிக்கிறார்களாம். கானமே வெறும் பொய்யடா இது காற்றடைத்த பையடா எனவும் மறைமுகமாக குத்திக் காட்டுகிறார்களாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top