Tamil Cinema News | சினிமா செய்திகள்
பரபரப்பை கிளப்பும் பிக்பாஸ்-4 போட்டியாளர்கள் லிஸ்ட்.. அழகிகளுடன் சேர்த்து அராத்து ஆட்களை களமிறக்கிய விஜய் டிவி!
மற்ற மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்ட நிலையில் தமிழில் எப்போது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொடங்கியுள்ளது. ஏற்கனவே லாக்டோன் போர் அடிப்பதால் பிக்பாஸ் வந்தால் இன்னும் ரசிகர்களுக்கு ஒரு என்டர்டைன்மென்ட் இருக்கும்.
இந்நிலையில் விஜய் டிவி அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகிய நிலையில் தற்போது போட்டியாளர்களை தேடி வருகிறது விஜய் டிவி.
அந்த வகையில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் சுவாரசியமான ஆட்களை வீட்டிற்குள் களமிறக்கி வெடிகுண்டு போடுவது விஜய் டிவிக்கு ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் இந்த முறை காசுக்காக யாரெல்லாம் மாட்ட இருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
கடந்த சில மாதங்களாகவே நடிகை ரம்யா பாண்டியனை குத்தகைக்கு எடுத்திருக்கும் விஜய் டிவி அவரை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கல்லா கட்ட முடிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து கவர்ச்சி கட்டழகி சனம் ஷெட்டி களமிறங்க உள்ளார்.
மேலும் சமீபத்தில் வனிதா பிரச்சனையில் சிக்கிய சூர்யா தேவி, டிக் டாக் கவர்ச்சி இலக்கியா, யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் டிவி கோபிநாத் ஆகியோர் களம் இறங்க உள்ளார்கள்.
5 மணிக்கு கவர்ச்சிப்புயல் ஷிவானி நாராயணன் இந்த நிகழ்ச்சியில் களமிறங்க உள்ளதால் இப்போது அந்த நிகழ்ச்சிக்கு பயங்கர எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கோபிநாத் கலந்துகொள்வது சந்தேகம் தான் என்கிறது வட்டாரம்.
மேலும் ஷாலு ஷம்மு, நடிகை சுனைனா போன்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் யார் யாரெல்லாம் கலந்துகொண்டால் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை கமெண்ட்டுகளை பதிவு செய்யவும்.
