ஐதராபாத்தில் 2017 ஆம் ஆண்டின் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி உத்சவ விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பச்சை கம்பள நிகழ்ச்சிக்கு சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது, வரலட்சுமி புடவையில் வந்திருந்தாலும், புடவையை அணிந்து வந்த விதம் படு கவர்ச்சியாக இருந்தது. இங்கு 2017 ஆம் ஆண்டின் ஐஐஎஃப்ஏ உத்சவ விருது விழாவிற்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் அணிந்து வந்த உடை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கோல்டன் பார்டர்

கோல்டன் பார்டர்

வரலட்சுமி அணிந்து வந்த சந்தன நிற புடவையின் பார்டர்களில் கோல்டன் நிற முத்துக்கள் இணைக்கப்பட்டிருந்தது, புடவை அழகாக வெளிக்காட்டியது.

டாட்டூ

டாட்டூ

இந்த சந்தன நிற புடவைக்கு வரலட்சுமி அணிந்து வந்த ஜாக்கெட்டின் முன்புறம் மற்றும் பின்புறம் மிகவும் கீழிறங்கி இருந்ததோடு, முதுகுப் பகுதியில் போட்டிருந்த டாட்டூவும் நன்கு வெளிப்பட்டது.

மேக்கப்

மேக்கப்

நடிகை வரலட்சுமி இந்த புடவைக்கு ஏற்றவாறு கண்களுக்கு கண் மையும், உதட்டிற்கு மின்னும் லிப்ஸ்டிக்கும் போட்டு பொருத்தமான மேக்கப்பில் வந்திருந்தார் எனலாம்.

ஹேர் ஸ்டைல்ஹேர் ஸ்டைல்

நடிகை வரலட்சுமி சரத்குமார் இந்த புடவைக்கு சைடு ஸ்வெப்ட் எடுத்து, ஒருபக்கமாக தலைமுடி அனைத்தையும் விட்டு வந்திருந்தார்.