திருமணத்திற்குப்பின் சினிமா வாழ்க்கை போச்சே என புலம்பும் 8 டாப் நடிகைகள்.. திரையில் இப்பவும் பார்க்க துடிக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு இருக்கும் அளவிற்கு ஹீரோயின்களுக்கான மார்க்கெட் வெகுநாள் நீடிப்பதில்லை அப்படியே சில காலம் நீடித்து இருந்தாலும் திருமணம் முடிந்த பிறகு அடுத்தடுத்த படங்களில் காணமலே போய்விடுகிறார்கள். அப்படியான சிலரை பற்றிய பார்வைதான் இந்த தொகுப்பு.

சிம்ரன்: ராதா, அம்பிகாவின் காலகட்டத்திற்கு பிறகு பெருமளவு பேசப்பட்ட நடிகைகளில் ஒருவர் நடிகை சிம்ரன். “இடுப்பழகி” என்கிற பட்டத்திற்கு சொந்தக்காரருமாவார். 1995 முதல் 2008 வரை ஆதிக்கம் செலுத்திய சிம்ரன் அதற்கு பிறகு திரையிலேயே காண முடியாமல் போனது நீண்ட இடைவெளிக்கு பிறகு சீமராஜா படத்தில் சமந்தாவின் சித்தியாக நடித்திருந்தார்.

அதற்குப்பின் வெகு நாட்கள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பேட்ட படத்தில் நடித்தார். தற்போது சியான் 60 படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரம்பா: உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் தமிழ் திரையுலகை ஆள அடுத்து ஒருவர் வந்து விட்டார் என்கிற நம்பிக்கை தந்தார் ரம்பா “தொடையழகி” என்கிற பட்டத்திற்கும் சொந்தமானவர் அன்றைய இளைஞர்களின் கனவுக்கன்னியும் ஆனார். தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பெங்காலி படங்களிலும் நடித்திருந்த ரம்பாவுக்குமான மார்க்கெட் மணமுடந்த பிறகு சரிவை சந்தித்தது. சில நடன ஷோக்களுக்கு நடுவராக இருந்து வருகிறார்.

ரீமா சென்: திமிரு, வல்லவன் போன்ற மெகாஹிட் படங்களில் நடித்தவர் ரீமா சென் சில படங்களில் கவர்ச்சியில் குதித்தாலும் படு கவர்ச்சியாக பதிவேற்றம் செய்வதில் கெட்டிக்காரராக இருந்தார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கவர்ச்சி கடலில் குளிக்க வைத்தவர் 2012-ல் நடந்த திருமணத்திற்கு பிறகு சரிவை சந்தித்தார்.

ஸ்ரேயா: சிவாஜி தி பாஸ், மழை போன்ற வெற்றிப்படங்களின் நாயகி யாரது வெற்றிடத்தையும் நிரப்பாது தனக்கென்ற தனி இடத்தை உருவாக்கி அங்கேயே தங்கினார். அவருக்கு பிறகு என அவ்விடத்திற்கு பலரும் வந்து சென்றாலும் அவருக்கு இணையான யாரும் பிடிக்கவில்லை என்றே கூறலாம். திருமணத்திற்கு இவருக்கமான வாய்ப்புகள் குறைந்து போனது.

shirya
shirya

தேவயாணி: 90-களில் குடும்ப நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயாணி. அப்போதைய லீட் நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டிருந்தவருக்கு இயக்குனர் ராஜ்குமாரோடு நடந்த திருமணத்திற்கு பிறகு வாய்ப்புகள் வெகுவாய் குறைந்துபோனது.

குஷ்பு: சின்னத்தம்பி படத்தில் அறிமுகமாகி ஏற்றப்பாதையில் கதைகளை நகர்த்திச்சென்றவர் குஷ்பு. இளைஞர்களால் இவருக்கு கோவிலே கட்டப்பட்டது. இதுவரை எந்த நடிகைக்கும் இத்தனை ஆரவாரம் கிடைத்ததில்லை. கமல் ரஜினி என ஜோடி போட்டவருக்கு சுந்தர்.சி உடன் நடந்த திருமணத்திற்கு பிறகு கிடுகிடுவென சரிந்தது மார்க்கெட் சில ரியாலிட்டி ஷோக்களின் நடுவராகவும் அரசியல் பிரமுகராகவும் வலம் வருகிறார்.

ரோஜா: நடிகை ரோஜா 90-களில் சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டவர் செம்பருத்தி முதலே இவருக்கான ரசிகர் கூட்டம் உயர்ந்து கொண்டே தான் இருந்தது. இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்த ரோஜா இப்போது அரசியல் பிரமுகராக ஆந்திராவில் உள்ளார்.

நஸ்ரியா:நேரம், ராஜா ராணி, நையாண்டி என அடுத்தடுத்த ஹிட்களை கொடுத்தவர் நஸ்ரியா நாஸிம். புகழின் உச்சத்தில் இருந்த அதே தருணத்தில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே நடிகர் பகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டார். அதற்கு பின்னர் வாய்ப்புகள் எதனையும் ஏற்கவில்லை…

Next Story

- Advertisement -