நடிகருடன் ஒரே வீட்டில் வசிக்கும் இளம் நடிகை.. விரைவில் திருமணமாம்

tamil-actress-gossip-1
tamil-actress-gossip-1

சினிமாவில் நடிகர் மற்றும் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வதும் பின்னர் விவாகரத்து செய்து கொள்வதும் வழக்கமான கதையாகி விட்டது. இதுதவிர அடிக்கடி நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த கிசு கிசுக்களும வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தற்போது அப்படி ஒரு செய்தி தான் வெளியாகி உள்ளது.

அதன்படி இளம் நடிகை ஒருவர் தற்போது முன்னணி நடிகர் ஒருவருடன் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறாராம். அந்த இளம் நடிகை தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்துள்ளார். ஒரே சமயத்தில் வெளியான இந்த இரண்டு படங்களுமே பெரிய ஹீரோக்கள் படம் என்பதால், தற்போது அந்த இளம் நடிகை தமிழில் கவனிக்கப்படும் நடிகையாக மாறியுள்ளார்.

இந்நிலையில் தன்னுடன் நடித்த முன்னணி நடிகர் ஒருவருடன் அந்த நடிகைக்கு காதல் ஏற்பட்டுள்ளது. அந்த நடிகரும் பல ஆண்டுகளாக காதல் தோல்வி மற்றும் பல ஏமாற்றங்களை சந்தித்து தற்போது வரை சிங்கிளாகவே இருந்து வருகிறார். இந்நிலையில் தான் இருவரும் இணைந்து நடித்தபோது காதல் ஏற்பட்டதாம்.

இதனையடுத்து தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. பல நாட்களாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், தற்போது பலருக்கும் இந்த விஷயம் தெரியவந்து விட்டதாம். இதனால் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பல சினிமா நட்சத்திரங்கள் காதல் திருமணம் செய்துள்ள நிலையில் விரைவில் இந்த ஜோடியும் அந்த வரிசையில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவர்கள் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Advertisement Amazon Prime Banner