Tamil Cinema News | சினிமா செய்திகள்
பட வாய்ப்பில்லாததால் காதலனை தூக்கி எறிந்த ஆர்மி நடிகை.. இவருக்கா சப்போர்ட் பண்ணுணீங்க மக்களே?
தற்போது சின்னத்திரை உலகில் முன்னணியில் இருப்பது விஜய் டிவிதான். காரணம் புதுவிதமான ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து மக்களை கவர்ந்து வைத்துள்ளனர். அதுவுமில்லாமல் ரியாலிட்டி ஷோ என்றாலே அது விஜய் டிவிதான் என முத்திரை பதித்து விட்டனர்.
அதுபோல வட நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட நிகழ்ச்சிதான் பெரிய முதலாளி. முதல் சீசனே பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. அதில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட ஜோடி மருத்துவ முத்தம் குரூப்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும் அந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிய வரவேற்பைப் பெற்றவர் டிராயிங் நடிகை. பெரிய முதலாளி வீட்டிலிருந்து பாதியில் வெளியேறிய பிறகு சினிமாவில் கவனம் செலுத்தினார்.
அவர் நடித்த ஒரு கேடுகெட்ட படத்தினால் அவரது மானம் பாதாளத்தை நோக்கிச் சென்றது. அதன் பிறகு சினிமாவில் பெரிய வாய்ப்பில்லை. தனது காதலருடன் அதிகமாக ஊர் சுற்றியதால் பட வாய்ப்பு வரவில்லை என எண்ணிய நடிகை, தற்போது அவரை கழட்டி விட்டு விட்டாராம்.
என்னதான் டைட்டில் வின்னராக இருந்தாலும் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த மார்க்கெட் சம்பந்தப்பட்ட திரைப்படம் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
