ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

வேகமாக விவாகரத்து பெற்ற 10 நடிகைகள்.. சினிமா வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா!

கல்யாணத்தை ஆயிரம் காலத்து பயிராய் கருதும் இந்திய சினிமாவிலும் பல்வேறு பிரபலங்கள் அதனை அப்படியாக எடுத்துக்கொள்வதில்லை. சூட்டிங் முடிந்ததும் கலைத்து விடப்படும் கூட்டணி போல சினித்துறையில் பல்வேறு திருமணங்கள் சில காலத்திலேயே கசப்பிட செய்கிறது. அப்படியாக அதிவிரைவில் பிரிந்த சிலரை பட்டியலிட்டுள்ளோம்.

வனிதா விஜயகுமார்: நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியினரின் மகள் வனிதா விஜயகுமார். குடும்ப விவகாரங்களில் பல்வேறு கருத்துகள் முன்வைகப்பட்டாலும் பிக்பாஸ் சீசனில் தன்னை ரசிக்கும் ஒரு கூட்டத்தையே உருவாக்கினார் வனிதா. 2020-ல் மூண்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்த வனிதா சில மாதங்களிலேயே தனியாக சென்று விட்டார்.

vanitha-cinemapettai-01
vanitha-cinemapettai-01

வி.ஜே ரம்யா: விஜய் டிவி உட்பட சில தொலைக்காட்சிகளில் வீடியோ ஜாக்கியாக பணியாற்றி உயர்ந்தவர் வி.ஜே.ரம்யா. ஆடிட்டர் அபராஜித் என்பவரை 2014-ல் திருமணம் செய்த ரம்யா 2015-ல் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

vj-ramya
vj-ramya

சுகண்யா: 90களில் உச்சத்தில் இருந்த நடிகை சுகண்யா. விஜயகாந்த் சத்யராஜ் என இவரின் கூட்டணியில் எல்லாம் வெற்றிக்கனிகள். 2002-ல் ஸ்ரீதர் என்கிற ஒரு தொழிலதிபரை திருமணம் செய்த சுகண்யா 2003-ல் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

sukanya-cinemapettai
sukanya-cinemapettai

அமலா பால்: திரையில் வந்த சில காலத்திலேயே அதிவேகமாய் வளர்ந்தவர் நடிகை அமலா பால். மைனா தலைவா என அத்தனையும் ஹிட். இயக்குனர் ஏ.எல் விஜயை2014-ல் திருமணம் செய்த அமலா பால் 2015-ல் தனியாக வந்து விட்டார். 2017-ல் விவாகரத்தும் வாங்கிவிட்டார்.

amalapaul-cinemapettai
amalapaul-cinemapettai

கௌதமி: 90களில் கமல் ரஜினி உட்பட பல்வேறு உச்ச நட்சத்திரங்களுடன் நடித்தவர் நடிகை கௌதமி. 1998ல் தொழிலதிபரை திருணம் செய்த கௌதமி 1999ல் விவாகரத்து செய்தார் பிறகு நீண்ட காலம் கமலஹாசனோடு இருந்த கௌதமி 2019ல் அவர்களுக்குள் இருந்த உறவை முறித்துக்கொண்டார்.

gautami
gautami

மம்தா மோகன்தாஸ்: பல்வேறு ஹிட் படங்களை வாரி வழங்கியவர் நடிகை மம்தா மோகன் தாஸ் 2011ஆம் ஆண்டு தொழிலதிபர் பிரதீப் என்பவரை திருமணம் செய்தவர் 2012-ல் விவாகரத்து பெற்றார்.

மனிஷா கொய்ராலா: நேபாள பூர்வீகமான மனிஷா கொய்ராலா உயிரே பம்பாய் பாபா இந்தியன் முதல்வன் என அல்டிமெட் ஹிட்களில் முன்னணி நடிகர்களோடு கூட்டணி போட்டவர். 2008-ல் சாம்ராட் டால் என்ற தொழிலதிபரை திருமணம் செய்தவர் 2009-ல் விவாகரத்து செய்தார்.

ராதிகா சரத்குமார்: 90களில் பல்வேறு வெற்றிப்படங்களை தந்த நாயகி ராதிகா சரத்குமார். பிசியான நடிகையாக அப்போது வலம் வந்த நடிகை ராதிகா1985-ல் இயக்குனர் பிரதாப்போத்தனை திருமணம் செய்தார் அதி வேகமாய் 1986-லியே விவாகரத்தும் பெற்று விட்டார்.

radhika-cinemapettai-01
radhika-cinemapettai-01

திவ்யதர்ஷினி: சினித்திரை சின்னத்திரை என இருவேறே பக்கங்களிலும் புகழ் பெற்றவர் திவ்ய தர்ஷினி. நடிகை டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தொகுப்பாளர் என் பல்வேறு திறமை கொண்ட டிடி 2014-ல் குடும்ப நண்பர் ஸ்ரீகாநத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இரு வேறு திசைகளில் சென்று குடும்பம் 2017ல் விவாகரத்தும் பெற்றது.

dd-divya-dharshini
dd-divya-dharshini

சொர்ணமால்யா: நடிகை பரதநாட்டிய கலைஞர் என இரு முகங்களாக ரசிக்க வைத்து நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் களமிறங்கியவர் நடிகை சொர்ணமால்யா. 2002-ல் குடும்ப நண்பரை திருமணம் செய்த சொர்ண மால்யா 2003ல் விவாகரத்து பெற்றார். காலம் கடந்து வாழும் என சேர்த்து வைத்த பந்தங்களும் சேர்க்க துணிந்த சொந்தங்களும் என் கனவுகளை கதையாக்கி விடுகிறது.

- Advertisement -

Trending News