தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாருக்கு மகளாக தர்பார் திரைப்படத்திலும், உலகநாயகனுக்கு மகளாக பாபநாசம் திரைப்படத்திலும் சிறப்பாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை நிவேதா தாமஸ். அத்துடன் இளைய தளபதியுடன் ஜில்லா திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இவர் பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் செய்த சாதனை ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகினர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தான்சானியா நாட்டில் கிளிமாஞ்சாரோ என்கிற உயர்ந்த சிகரம் உள்ளது. அந்த சிகரத்தின் மேல், மலையேறும் பயிற்சி பெற்ற நபர்கள் மட்டுமே ஏறுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பிரபல நடிகை நிவேதா தாமஸ் இந்த சிகரத்தின் மீது ஏறி சாதனை படைத்துள்ளார்.
சிகரத்தின் மீது ஏறி நிற்கும் நிவேதா தாமஸ், நமது தேசியக் கொடியை பிடித்துக் கொண்டு நிற்பது போன்ற புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

இதுபோன்ற சிகரத்தின் மீது ஏறுவதற்கு சில மாதங்கள் பயிற்சி எடுக்க வேண்டும். அவ்வாறு பயிற்சி பெற்ற பிறகே இது போன்ற சிகரங்களில் ஏற இயலும். இவரின் இந்த புதிய சாதனைக்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் இந்த கிளிமாஞ்சாரோ சிகரம் 5,895 மீட்டர் உயரம் கொண்டது.
நிவேதா தாமஸ், இந்த சிகரத்தின் மீது ஏறுவதற்கு கடுமையான 6 மாதம் தொடர் பயிற்சி மேற்கொண்டுள்ளார். பொதுவாக நடிகைகள் தன்னுடைய அழகில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் நிவேதா புதுவித சாதனையை மேற்கொண்டது திரை உலகையே பார்க்க வைத்துள்ளது.