Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரகசிய ஹீரோவுக்கு காசை வாரி இறைக்க ரெடியான பிரபல நடிகை.. அப்படி என்ன இரண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி
கோலிவுட்டில் சம்பாதிக்கும் நடிகைகள் அவ்வப்போது படம் தயாரிக்க ஆசைப்படுவது உண்டு. அப்படி படம் அவர்களே தயாரித்தாலும், அவர்கள் தயாரிக்கிறார்கள் என்று தெரியாத அளவுக்கு ரகசியம் காப்பது உண்டு. அப்படித்தான் பிரபல நடிகை சத்தமே இல்லாமல் பினாமி பெயரில் படம் தயாரித்து வருகிறாராம்.
பாடகியாகத்தான் சினிமாவுக்குள் அறிமுகம் ஆன அந்த ஐந்து எழுத்து நடிகை, மலையாள பெயர் கொண்ட இயக்குனர் கிளியான படத்தில் நடிக்க வைத்து அறிமுகம் செய்தார். அந்த படத்துக்கு பின்னர் நடிகைக்கு தொடர்ந்து கிளாமர் வேடங்களே வந்தது.
எனினும் தேர்ந்தெடுத்து அவர் நடித்த படங்கள் பல ஹிட் வரிசையில் சேர்ந்தன. நல்ல நடிகை, சிறப்பான பாடகி என பெயர் பெற்ற அவர் தனக்கு திருமணம் ஆன நபர் ஒருவரால் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி பரபரப்பை அண்மையில் பற்ற வைத்தார். அவர் ஒரு அரசியல்வாதி என்று வெளியான தகவலை பின்னாளில் மறுத்தார்.
தற்போது அம்மணிக்கு அழகாகத்தான் எல்லாய் போய் கொண்டிருக்கிறது. இவர் அண்மையில் நடித்த சில படங்கள் சூப்பர் பெயர் கிடைத்து. 3 எழுத்த டாப் நடிகர் வாத்தியாராக நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே முதலீடு செய்ய நினைத்துள்ளாராம்.
சம்பாதித்த பணத்தை வேறு ஏதாவது வழியில் முதலீடு செய்யும் நடிகைகளுக்கு மத்தியில் வித்தியாசமான நடிகையாக உள்ளார். இவர் தனக்கு வேண்டிய இயக்குனருக்காக பினாமியாக படம் தயாரிக்கிறாராம். படத்துக்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறதாம். சமீபத்தில் போட்டோஷூட் நடந்திருக்கிறது. இது எப்படியோ லீக் ஆகிவிட்டது.
