Connect with us
Cinemapettai

Cinemapettai

actress-gossip

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

பழைய குருடி கதவை திறடி என பிரபல நடிகருடன் மீண்டும் காதலா? சீனியர் நடிகை செய்யும் அட்டகாசம்

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாகவே ஹீரோயினாக வலம் தமிழ் சினிமாவில் நீண்ட காலமாகவே ஹீரோயினாக வலம் வருபவர் தான் அந்த பிரபல நடிகை.

இவரை செல்லமாக நம்பர் நடிகை எனவும் அழைப்பார்கள். துணை நடிகையாக அறிமுகமாகி பின்னர் உச்ச நடிகையாக வலம் வந்தவர்.

தன்னுடைய சினிமா கேரியரில் ஆரம்பத்திலேயே ஒரு இளம் நடிகருடன் கிசுகிசுக்கப்பட்ட இந்த நடிகை பின்னர் ஒரு தெலுங்கு நடிகருடன் நெருக்கமாக இருப்பது தெரியவந்தது.

அந்த நடிகருடன் இஷ்டத்திற்கு ஊர் சுற்றி வந்த அந்த நடிகையை கழட்டி விட்டுவிட்டு சமீபத்தில் அந்த நடிகர் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு நடிகைக்கு டாட்டா காட்டி விட்டார்.

இதனால் சில நாட்கள் சோகத்தில் இருந்த அந்த நாயகி தற்போது மீண்டும் ஒரு இளம் நடிகருடன் தன்னுடைய பழைய காதலை புதுப்பிக்க உள்ளாராம்.

சமீபத்தில் அந்த இளம் நடிகர் ஒருவர் தன்னுடைய உடல் எடையை மொத்தமும் குறைத்து பழைய கெட்டப்புக்கு வந்ததால் தமிழ் சினிமாவில் தற்போது அவரை பற்றிய பேச்சுகள் தான் அதிகமாக உள்ளது.

இழந்த பெயரையும் புகழையும் ஒரே புகைப்படத்தால் மீட்டெடுத்த அந்த நடிகரின் மீது காதல் ஏற்பட்டதை உணர்ந்து தற்போது நட்பு ரீதியாக காய் நகர்த்த பார்க்கிறாராம் அந்த நடிகை.

நெருங்கிய நட்பு உருவானவுடன் தன்னுடைய காதலைச் சொல்லலாம் என முடிவெடுத்துள்ளாராம் அந்த நடிகை. வயது 35 க்கு மேலான நிலையில் சீக்கிரம் திருமணம் செய்யவில்லை என்றால் அறுபதாம் கல்யாணம் தான் நடக்கும் என வீட்டு சைடில் நடிகைக்கு பிரஷர் கொடுக்கிறார்களாம்.

Continue Reading
To Top