தமிழ் நடிகர்கள் தற்போது தெலுங்கிலும் தடம்பதித்த கொண்டிருக்கின்றனர். ஆனால் தெலுங்கில் என்ட்ரி ஆகும் தமிழ் நடிகர்களுக்கு தற்போது தெலுங்கு தயாரிப்பாளர்கள் கண்டிஷன் போட்டு கொண்டிருக்கின்றனர்.
நடிகர்களுக்கு மட்டும் தான் சம்பளம் கொடுப்போம். அசிஸ்டன்ட் பீஸ், ஹோட்டலில் தங்குவதற்கான செலவு எல்லாவற்றையும் நடிகர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் இரண்டு மாதம் கழித்து ஓடிடி-க்கு கொடுக்கணும்.
Also Read: புருஷனிடம் போட்டுக் கொடுத்த எட்டப்பன்.. நீண்ட நாளுக்கு பின் கழட்டி விட்ட சமந்தா
மேலும் தினம்தோறும் படத்தின் அப்டேட்டை தயாரிப்பாளர்களிடம் கொடுக்கணும். இப்படியெல்லாம் வரிசையாக தெலுங்கு தயாரிப்பாளர்கள் தமிழ் நடிகர்களுக்கு கொஞ்சம்கூட ஒத்துவராத கண்டிஷன்களை எல்லாம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
கோலிவுட்டில் சொகுசாக இருந்த தமிழ் நடிகர்களுக்கு தெலுங்கு தயாரிப்பாளர்கள் போடும் கண்டிஷனை எல்லாம் பார்த்தபிறகு, இனி தமிழ் நடிகர்கள் இப்ப நடிக்கும் தெலுங்கு படங்களுக்கு பிறகு வேறு எந்த தெலுங்கு படங்களிலும் நடிக்க கூடாது என பிளான் போட்டிருக்கின்றனர்.
ரஜினிகாந்த், விஜய், சூர்யா, கார்த்தி என தமிழ் நடிகர்கள் நடிக்கும் படங்கள் தமிழகத்தில் ரிலீஸ் ஆகும் நாட்களிலேயே தெலுங்கிலும் ரிலீஸ் ஆகி, அங்குள்ள ரசிகர்களையும் தமிழ் ஹீரோக்கள் வளைத்துப் போட்டிருக்கின்றனர். இதனால் தமிழ் ஹீரோக்கள் தற்போது தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதனால் தெலுங்கு திரைப்பட உலகில் தமிழ் நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாகி விடுமோ என்ற எண்ணத்தில், தயாரிப்பாளர்கள் இதுபோன்ற கண்டிசன் போட்டு, அவர்களை தெலுங்கு பக்கம் வர விடாமல் இருக்க இப்படி எல்லாம் செய்கிறார்கள்.
Also Read: வலிமை வில்லனுக்கு அஜித் செய்த உண்மையான ஹீரோயிசம்.. மெய்சிலிர்த்து போன தெலுங்கு தேசம்