ரஜினிகாந்தை பார்த்து தெறித்து ஓடிய தயாரிப்பாளர்.. சினிமாவை விரும்பி, வெறுத்த பரிதாபம்

ஒரு படம் உருவாவதற்கு கதை, இயக்குனர், நடிகர், நடிகைகள் எவ்வளவு முக்கியமோ அதற்கு பல மடங்கு மேலாகவே தயாரிப்பாளர் முதலீடு முக்கியம். அதுமட்டுமல்லாமல் படம் லாபம் அடைந்தாலும், தோல்வியடைந்தாலும் அது தயாரிப்பாளரை தான் சேரும்.

படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவது, படத்தின் மீது சர்ச்சை எழுவது எல்லாமே தயாரிப்பாளர்தான் பாதிக்கும். ஒரு படத்தை தயாரித்து ரிலீஸ் செய்து வெற்றி பெறுவதற்குள் ஒரு தயாரிப்பாளர் பல கஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்கள் எப்போதுமே பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும். இதனால் பல இயக்குனர்களும் ரஜினி படத்தை தயாரிக்க விரும்புவார்கள். ஏவிஎம் தயாரிப்பாளர் சரவணன் ரஜினி படம் என்றால் முதல் ஆளாக வந்து நிற்பார்.

ரஜினி இயக்குனரிடம் கதையை கேட்டு ஓகே என்று சொல்லிவிட்டால் உடனே சார் நம்ம இந்தப் படத்தை பண்ணலாம் என கூறுவார். ஆனால் தற்போது இந்த மனுஷன் நொருங்கிப் போய் உள்ளார். காரணம் தற்போது எல்லா ஹீரோக்களும் நூறு கோடியில் சம்பளம் கேட்கிறார்கள். இந்த ஒரு விஷயத்தால் ஏவிஎம் சரவணன் தற்போது படங்களை எடுப்பதில் தயக்கம் காட்டி வருகிறாராம். இது ஒருபுறம் சினிமா துறைக்கு பெரும் இழப்புதான்.

தற்போது உள்ள முன்னணி ஹீரோக்கள் தமிழ் படத்தை போல மற்ற மொழி படங்களிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். இதனால் இவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தால் உடனே சம்பளத்தை உயர்த்தி விடுகிறார்கள்.

இதனால் ஹீரோக்களின் படத்தை தயாரிக்க தயங்குகிறார். விஜய், அஜித் போன்ற நடிகர்களும் தற்போது 100 கோடி சம்பளம் கேட்கிறார்கள். இதனால் பெரிய தயாரிப்பு நிறுவனமே முன்னணி ஹீரோக்களின் படங்களை தயாரிக்க விழிபிதுங்கி நிற்கிறது.

முன்னணி நடிகர்களின் படத்தை தயாரித்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும் அதில் பெரிய தொகை நடிகர், நடிகைகளுக்கே சென்றுவிடுகிறது. இதனால் தற்போது புதுமுக நடிகர்களை வைத்து படங்களை தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்