Connect with us

Cinemapettai

tamil-cinema-actors

Cinema News | சினிமா செய்திகள்

கோலிட்டில் உச்ச நடிகர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கோலிவுட்டில் இப்போது பெரிய ஹாட் டாபிக் என்றால் உச்ச நட்சத்திரங்கள் வாங்கும் சம்பளம் பற்றிய தகவல் தான். பெரிய நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்றும் பெரிய இயக்குனர்கள் உள்பட திரைக்கலைஞர்களின் சம்பளத்தை வரன்முறை படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் மத்தியில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. சரி எவ்வளவு தான் வாங்குவதாக கோலிவுட்டில் தகவல் உலா வருகிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – 70 கோடி
தளபதி – விஜய் 50 கோடி
‘தல’ அஜித் – 45 கோடி
உலக நாயகன் கமல்ஹாசன் – 35 கோடி
சூர்யா – 25 கோடி
சீயான் விக்ரம் – 18 கோடி
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – 9 கோடி
தனுஷ் 9 கோடி
சிம்பு 9 கோடி
சிவகார்த்திகேயன் 5 கோடி

இந்த தகவல் எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் இருப்பதிலேயே ரஜினி தான் அதிகபட்ச சம்பளம் வாங்குவதாகவும் விஜய் அடுத்த இடத்தில் இருப்பதாகவும் தகவல்கள் சொல்கிறார்கள்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா 4 கோடி வாங்குகிறார் என சொல்லிக் கொள்கிறார்கள்.

ஒரு படத்தின் பட்ஜெட்டில் பெரும் பகுதி நடிகர்களின் சம்பளத்துக்கே செல்வாகி விடுவதால் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்திப்பதாக சொல்கிறார்கள். வணிகரீதியாக படம் வெற்றி பெற்றால் தயாரிப்பாளர்களுக்கு பிரச்னையில்லை, ஆனால் அப்டம் தோல்வியைத் தழுவினால் நஷ்டத்துக்கு உள்ளாகிறார்கள். தமிழ் சினிமாவில் 90 சதவீத படங்கள் தோல்வியை சந்திக்கின்றன. 10 சதவீத படங்களே வெற்றி பெறுகின்றன. இந்த 90 சதவீதத்தில் குறிப்பிட்ட படங்கள் குறைவான பட்ஜெட்டில் தயாராகி இருந்தால் போட்ட முதலை எடுத்துவிடுகிறாறர்கள். மற்றவர்கள் நஷ்டம் குறைவாகவோ அல்லது மிகுதியாக சந்திக்கிறார்கள்.

இந்நிலையில்தான் நடிகர்களின் சம்பளத்தை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி உள்ளார். டிக்கெட் கட்டணத்தையும் முறைப்படுத்தப்போவதாக கூறியுள்ளார். இதன்படி டிக்கெட் கட்டணம் அதிக அளவுவிற்க முடியாத நிலை ஏற்பட்டால் நிச்சயம் தயாரிப்பாளர்கள் அதிக பட்ஜெட் போட்டு படம் எடுப்பது கடினமாகிவிடும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top