Connect with us
Cinemapettai

Cinemapettai

Entertainment | பொழுதுபோக்கு

நடிகர்கள் டைரக்ட் செய்து படுதோல்வி அடைந்த படங்கள்.. இனி அந்த தவறை பண்ணவே மாட்டார்கள்

சில நடிகர்கள் நடிப்பதை விட்டு டைரக்ஷனில் இறங்கி பின்பு டைரக்ஷன் பக்கமே இனி போகக்கூடாது என முடிவெடுத்து இருக்கிறார்கள். அதில் சிம்பு, தனுஷ் என வெற்றி பெற்ற நடிகர்கள் இருந்தாலும் அந்த காலத்தில் மிகப்பெரும் நடிகர்களே தோல்வியை அடைந்திருக்கிறார்கள். நல்ல வேலை பிரபு, கார்த்திக் போன்றவர்கள் இதிலிருந்து தப்பித்து விட்டார்கள்.

சத்யராஜ் – வில்லாதி வில்லன்

villadhi-villain

villadhi-villain

சத்யராஜ் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் வில்லாதி வில்லன். இப்படத்தில் நக்மா, ராதிகா, கவுண்டமணி மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வெற்றியைப் பெற்றன. மிகபெரிய அளவில் தயாரித்து படத்தை வெளியிட்டார் சத்யராஜ் ஆனால் படம் மாபெரும் தோல்வி அடைந்தது.

விஜயகாந்த் – விருதகிரி

virudhagiri

virudhagiri

விஜயகாந்த் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் விருதகிரி. இப்படத்தில் மீனாட்சி தீக்சித் மற்றும் ஆனந்த் பாண்டியன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சுந்தர் சி பாபு இசையமைத்துள்ளார். இப்படம் விஜயகாந்திற்கு மிகபெரிய தோல்வி படம்.

சரத்குமார் – தலைமகன்

thalaimagan-sarathkumar

thalaimagan-sarathkumar

சரத்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் தலைமகன். இப்படத்தில் வடிவேலு, நயன்தாரா மற்றும் முகேஷ் திவாரி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். ராதிகா இப்படத்தை தயாரித்துள்ளார். சரத்குமாருக்கு இப்படம் மிகபெரிய தோல்வி படம்.

இந்த மூன்று நடிகர்களும் இனி டைரக்ஷன் பக்கமே போக மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் இயக்கிய அனைத்துப் படங்களுக்கும் அவர்கள்தான் தயாரிப்பாளர்கள் ஒரு படத்தின் தோல்வி எந்தளவு பாதிப்பை உண்டாக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். நல்ல உதவி இயக்குனர்களிடம் நல்ல கதையைக் கேட்டு வாய்ப்பு அளித்தால் நன்றாக இருக்கும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top