கொஞ்சம் கூட ஈவு, இரக்கம் இல்லாத தமிழ் நடிகர்கள்.. மேடையிலேயே கேவலப்படுத்திய பிரபலம்

பொதுவாகவே எந்த மொழிகளில் படம் எடுத்தாலும் வெற்றியும் தோல்வியும் அடைந்துவிட்டால், அதற்கு காரணம் அந்த படத்தில் நடித்த ஹீரோக்களும் இயக்குனர்களும் தான். ஆனால், அதே போலஅந்த படத்தின் வெற்றி, தோல்வியின் வசூல் என்பது தயாரிப்பாளரையும் டிஸ்ட்ரிபியூட்டர்களையுமே சாரும். ஒரு படத்தின் வெற்றியின் வசூலை எப்படி பகிர்ந்து கொள்கிறார்களோ, அப்படி தான் தோல்வியின் வசூலையும் பகிர்ந்துகொள்ளவேண்டும். ஆனால், அது நம் தமிழ் சினிமாவில் நடப்பது இல்லை என்று ஆதங்கத்தோடு தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் கே ராஜன்.

சமீபத்தில் நடைபெற்ற விழா மேடையில் பேசிய தயாரிப்பாளர் ராஜன், தமிழ் சினிமாவில் நடிகர்கள், நடிகைகள் திரைப்படம் வெற்றி பெற்றால் உடனே தங்களது சம்பளத்தை உயர்த்திக் கொள்வார்கள். ஆனால் ஒரு திரைப்படம் தோல்வி அடைந்துவிட்டால் தன் சம்பளத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட குறைத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் தெலுங்கு சினிமாவில் அப்படியல்ல. தெலுங்கு சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் தர்மத்தை பின்பற்றுவார்கள். ஒரு திரைப்படம் தோல்வியடைந்தால் அவர்களின் பாதி சம்பளத்தை தயாரிப்பாளர்களுக்கு வழங்குவர். இந்நிலையில் தெலுங்கு நடிகர்களின் உதவும் மனப்பான்மையை குறித்து தயாரிப்பாளர் ராஜன் பகிர்ந்துள்ளார்.

2019ஆம் ஆண்டு நடிகர் ராம் சரண் நடிப்பில் இயக்குனர் போயாபதி ஸ்ரீனு இயக்கத்தில் வினய விதய ராமா திரைப்படம் வெளியாகி பெரும் தோல்வியை சந்தித்தது. மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் தோல்வியால் டிஸ்ட்ரிபியூட்டர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற நோக்கத்தில் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தனய்யாவிடம் தன் சம்பளத்தில் இருந்து 10 கோடி ரூபாய் ரூபாயை கொடுத்தார் ராம்சரண்.

அப்போது தயாரிப்பாளர் தனய்யா வேண்டாம் என்று கூற அதற்கு மறுத்த ராம்சரண், எனக்காக அத்திரைப்படத்தை டிஸ்ட்ரிபியூட்டர்கள் வாங்கினார்கள், இந்த நிலையில் படத்தின் தோல்வியின் காரணமாக அவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, அவர்களுக்கு பணத்தை கொடுத்து உதவுங்கள் என்று பெருமையாக கூறி சென்றாராம். அதேபோல பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸும் சமீபத்தில் இதுபோன்ற ஒரு போன்ற செயலை செய்ததாக தயாரிப்பாளர் ராஜன் தெரிவித்தார்.

சமீபத்தில் நடிகர் பிரபாஸ் நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் திரைப்படத்தின் தோல்வியை அடுத்து தன்னுடைய 100 கோடி ரூபாய் சம்பளத்தில் இருந்து பாதி தொகையான ரூ 50 கோடியை எடுத்துக்கொண்டு அப்படத்தின் தயாரிப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டு டிஸ்ட்ரிபியூட்டர்கள் இடம் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னாராம். இந்த நிகழ்வுகளை பகிர்ந்துகொண்ட ராஜன், தெலுங்கு நடிகர்கள் தர்மத்தை நிலைநாட்டும் நடிகர்களாக உள்ளனர் என்று பெருமிதம் தெரிவித்தார். ஆனால் தமிழ் சினிமாவில் இதுபோன்று ஒருநாளும் நடந்ததில்லை என்று ஆதங்கத்தோடு தெரிவித்தார்.

ஒரு படத்தின் தோல்வியை பற்றி தமிழ் நடிகர்கள் ஒருபோதும் சிந்திப்பதில்லை, அதனால் பாதிக்கப்படும் தயாரிப்பாளர்களுக்கும் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கும் அவர்கள் ஈவு இரக்கமே காட்டுவதில்லை என காட்டமாக தெரிவித்துள்ளார். முழு பணத்தையும் கொடுக்கவில்லை என்றால் சில நடிகர்கள் டப்பிங் பணிகளில் கூட ஈடுபட மாட்டார்கள் என்று வேதனையுடன் தெரிவித்தார். தெலுங்கில் எப்படி இது போன்ற உதவும் மனதோடு சில நிகழ்வுகள் நடைபெறுகிறதோ, அதே போன்று தமிழிலும் நடந்தால் தனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும் என்றும் தயாரிப்பாளர் ராஜன் தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்