Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-suriya-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வேறு நடிகரின் பட்ட பெயரை டைட்டிலாக சுட்டு போட்ட பிரபலங்கள்.. அதுலயும் தளபதி ரொம்ப மோசம்

தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு பட்டப் பெயர்கள் உள்ளன. அது படத்தின் டைட்டில் போட்டபிறகு நடிகரின் இன்றோடக்சன் வரும்போது நடிகரின் பெயருடன் பட்டப் பெயரையும் சேர்த்து திரையரங்குகளில் வெளியிடுவார்கள்.

ஆரம்ப காலத்தில் வேறொரு நடிகருக்கு வைத்த பெயரை தான் பல நடிகர்கள் தற்போது பட்டப் பெயராக பயன்படுத்தி வருகின்றனர். அது யார் யார் அவர்களது பட்ட பெயர் வருவதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

அனிதா:அனிதா முதலில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். ஆனால் எஸ் ஏ சந்திரசேகர் 2005ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடிப்பில் விஜய் கெஸ்ட் ரோலில் வெளியான சுக்கிரன் படத்தில் நதிஷா என பெயர் மாற்றி படத்தில் அறிமுகப்படுத்தினர்.

ஜெயம் ரவி: தமிழ் சினிமாவில் “இளம்புயல்” எனஅழைக்கப்படுபவர் ஜெயம் ரவி. ஆனால் தமிழ் சினிமாவில் ஏற்கனவே இளம்புயல் என தாஜ்மஹால் படம் வெளிவந்தபோது மனோஜ்விற்க்கு வைத்துள்ளனர். அதன்பிறகுதான் ஜெயம்ரவிக்கு இளம்புயல் என வைத்துள்ளனர். ஆனால் முதலில் இளம்புயல் என பெயர் வைக்கப்பட்டது மனோஜ்க்குதான்.

சூர்யா: தமிழ் சினிமாவில் இளைய தளபதி, தல மற்றும் சூப்பர் ஸ்டார் என எல்லா ஹீரோக்களுக்கும் பட்டப்பெயர் உண்டு. அதேபோல் ஆரம்பகாலத்தில் சூர்யா நடிப்பில் வெளியான உயிரிலே கலந்தது படத்தின் மூலம் இவருக்கு “இளம் நாயகன்” என பட்ட பெயர் வைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை எந்த ஒரு படத்திலும் சூர்யாவின் பட்ட பெயர் போடாமல் சூர்யா என போட்டு படம் வெளியாகி வருகிறது.

vishal jayam ravi

vishal jayam ravi

விஜய்: தமிழ் சினிமாவில் “இளைய தளபதி” என அழைக்கப்படுபவர் விஜய். ஆனால் வசந்தவாசல் திரைப்படத்தில் ‘இளம் தென்றல்’ விஜய் என போடப்பட்டது. பின்பு புதியகீதை படத்தில் புரட்சித்தளபதி என படத்தின் டைட்டிலில் போடப்பட்டது.

கடைசியாகத்தான் இளைய தளபதி என நிரந்தரமாகி தற்போது வரை அனைத்து படங்களும் இளையதளபதி என போடப்பட்டு வருகிறது. ஆனால் இதே டைட்டிலை நடிகர் சரவணன் தன்னுடையது என்று ஒரு பேட்டியில் கூறி இருப்பார்.

விஷால்: “புரட்சித் தளபதி” என்ற பட்டப்பெயர் ஆரம்ப காலத்தில் அருண் விஜய்க்கு தான் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை விஷால் தான் அந்தப் பட்ட பெயரை பயன்படுத்தி வருகிறார்.

மேற்கண்ட நடிகர்களை பார்த்தவரை ஜெயம் ரவி மற்றும் விஷால் தான் மற்ற நடிகர்கள் வைத்த பெயரை பயன்படுத்தி உள்ளதாக ஒப்புக்கொண்டனர்.

Continue Reading
To Top