tamil-actors-missed-movies

தமிழ் சினிமாவும் அரசியலும் ஒன்று தான், இவை இரண்டையும் எப்போதும் பிரிக்க முடியாது. எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், அந்த வகையில் பல படங்களில் முதலில் ஒருவர் நடிக்க, பிறகு அவர்கள் மாற்றப்பட்டு வேறு ஒருவர் நடித்தது அனைவரும் அறிந்ததே, அதன் சிறப்பு தொகுப்பு தான் இவை.

எந்திரன்

ஒரு படத்தின் சிறிய கதாபாத்திரம் வேண்டுமானால் மாறலாம், ஒரு படமே மாறி வேறு நடிகர்கள் நடித்தது இவை தான், அதிலும் போட்டோஷுட் படப்பிடிப்பு எல்லாம் நடந்து ட்ராப் ஆனது, ஆம், ரஜினி நடித்த எந்திரனில் முதலில் நடித்தது கமல்ஹாசன் தான்.

பொல்லாதவன்

பொல்லாதவன் தனுஷ் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம், இப்படத்தில் ரம்யா கதாபாத்திரத்தில் முதலில் காஜல் அகர்வால் தான் நடிக்கவிருந்தது, போட்டோஷுட் கூட முடிய பிறகு ரம்யா கமிட் ஆனார்.

ஆடுகளம்

aadukalamபடப்பிடிப்பே த்ரிஷாவை வைத்து பல நாட்கள் எடுத்து விட்டனர், பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை, த்ரிஷா இந்த படத்திலிருந்து விலக டாப்ஸி ஒப்பந்தமானார்.

நியூ

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் நியூ, இப்படத்தில் அஜித்-ஜோதிகா இருவரும் தான் நடிப்பதாக இருந்தது, ஒரு சில பிரச்சனையால் இந்த படத்தை எஸ்.ஜே.சூர்யாவே இயக்கி நடித்தார்.

கடல்

மணிரத்னம், ஷங்கர் இந்திய சினிமாவின் கௌரவம், இவர்கள் படத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் வெயிட்டிங், ஆனால், ஒரே நேரத்தில் இவர்கள் படத்தில்(கடல்-ஐ) நடிக்க சமந்தாவிற்கு வாய்ப்பு கிடைத்தது, ஆனால், அந்த படங்களை அவரே தவிர்த்தார். மேலும் சரும நோயால் அந்த சமயத்தில் அவர் பாதிக்கப்பட்டு இருந்தார் என கிசுகிசுக்கப்பட்டது.

நான் கடவுள்

ajith aryaநான் கடவுள் அஜித் நடிப்பதாக இருந்தது முடிந்தது எல்லாம் தெரிந்த கதை தான், ஆனால், முதலில் இந்த படத்தில் பூஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது பாவனா தான், அவரை வைத்து படப்பிடிப்பு கூட நடந்தது, நடிப்பு வரவில்லையா? இல்லை கால்ஷிட் பிரச்சனையோ அவர் விலக பூஜா உள்ளே வந்தார்.

செல்லமே

arjun vishalசெல்லமே படத்தின் மூலம் தான் விஷால் அறிமுகமானார், ஆனால், இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அர்ஜுன் தான், அவரின் கால்ஷிட் பிரச்சனையால் அந்த வாய்ப்பை தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த விஷாலுக்கு வழங்கினார்.

சந்திரமுகி

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்து ஒரு வருடத்திற்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற படம் சந்திரமுகி, இந்த படத்தில் ஜோதிகா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சிம்ரனிடம் பேச்சு வார்த்தை நடந்து பின் தான் ஜோதிகாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் நயன்தாரா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது சதா தான்.

ஜீன்ஸ்

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து ஆஸ்கர் வரை சென்ற படம் ஜீன்ஸ், இந்த படத்தில் முதலில் நடிக்க கமிட் ஆனது தல அஜித் தான், ஒரு சில கால்ஷிட் பிரச்சனையால் அந்த படத்திலிருந்து இவர் விலகினார்.

கனா கண்டேன்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடித்த படம் கனா கண்டேன், இப்படத்தில் முதலில் கோபிகா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை வித்யாபாலன் தான் நடிக்கவிருந்தார், அவர் சில பிரச்சனைகளால் அந்த படத்திலிருந்து விலக பின் கோபிகா கமிட் ஆனார்.

கோ

கோ படம் ஒரு ட்ரெண்ட் செட்டர் படம் என்றே கூறலாம், வளர்ந்து வரும் நடிகர்களை வைத்து கே.வி.ஆனந்த் கொடுத்த மாஸ் ஹிட் படம், இப்படத்தில் முதலில் ஜீவா கதாபாத்திரத்தில் சிம்பு, அஜ்மல் கதாபாத்திரத்தில் வினய் நடிக்கவிருந்து பின் ட்ராப் ஆனது.

விண்ணை தாண்டி வருவாயா

jayamravi simbuவிண்ணைத்தாண்டி வருவாயா சிம்பு திரைப்பயணத்தில் ஒரு மைல் கல், ஆனால், இந்த படத்தில் முதலில் நடிக்க கமிட் ஆகி பின் விலகியது யார் தெரியுமா? ஜெயம் ரவி தான், இதை அவரே வருத்தத்துடன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

வடசென்னை

vadachennaiவெற்றிமாறன் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வரும் படம் வடசென்னை, இப்படத்தில் தற்போது தனுஷ் நடித்து வருகிறார், ஆனால், இந்த படத்தில் சிம்பு நடிக்க ஒரு சில நாட்கள் படப்பிடிப்பே நடந்தது குறிப்பிடத்தக்கது.