tamil-actors-black-money

பொதுவா சினிமாவில் தயாரிப்பாளர்கள் கொடுப்பது எல்லாம் கருப்பு பணம். நடிகர்கள் பல கோடிகளில் வாங்குவதும் கருப்பு பணம். பாதி கருப்பு, பாதி வெள்ளை என்ற விதியிலாம் மீறி யாரும் படத்தை பற்றி யோசிப்பதே இல்லை. யாரும் நடிக்கவும் விரும்பவில்லை. நல்லா படிச்ச ஆடிட்டர்கள் உதவியை வைத்து, மூட்டை மூட்டையாக 1000, 500 ரூபாய் தாள்களை கட்டி பதுக்கி அடுக்கி மறைத்து புதைத்து  வைத்திருக்கிறார்கள்.

நம்ம புலிகேசி காமெடி நடிகருக்கு நல்ல பழக்கம் ஒன்று இருந்தது. தான் கோடிகளில் சம்பாதித்த பணத்தையெல்லாம் நிலத்தின் மேல் போட்டு ஏமாந்தது போக, மிச்சத்தை கட்டு கட்டாக அடுக்கி ஒரு ரகசிய பாதுகாப்பான இடத்தில் பதுக்கி வைத்திருப்பார். வாரம் ஒரு முறை அந்த அறையை திறந்து அவ்வளவு பணத்தையும் ஆசை தீர பார்த்து ரசித்து மறுபடியும் கதவை பூட்டிக் கொள்வார். மார்க்கெட்டிலிருந்து ஒதுங்கி வீட்டிலேயே பிடிவாதமாக இருந்த காலத்திலும் தினந்தோறும் இந்த ரகசிய அறையை திறந்து மகிழ்வது அவரது வாடிக்கைகளில் ஒன்றாக இருந்தது. மோடியின் இந்த அறிவிப்பு வந்த நாளில், நெஞ்சடைப்பே வந்துவிட்டதாம் அவருக்கு. இரவெல்லாம் ஃபுல் ஃபுல்லாக இறங்கியதாக கூறுகிறார்கள். எப்படி எல்லாத்தையும் மாற்றப் போகிறாரோ?

வெள்ளையை அப்பாகிட்ட டிடியா கொடுத்துருங்க. கருப்பை என் ஈசிஆர் பங்களாவுக்கு அனுப்பிடுங்க என்று அழகா பங்கு பிரிக்கும் நம்ம டாப் ஹீரோவுக்கு நேத்து நைட் உறக்கம் வந்திருக்குமா? டவுட்டுதான்.

நடிகரும் கட்சித் தலைவருமான அவர், பல பல கோடிகளை மூட்டை மூட்டையாக கட்டிப் போட்டு வைத்திருக்கிறாராம். அதெல்லாம் நள்ளிரவில் எரிக்கப்படுமா, புதைக்கப்படுமா? தெரியாது. ஆனால் அவர் நேத்து நைட் பூட்டிய வாயை இன்னும் திறக்கவேயில்லையாம்.

இன்னும் இதுபோல ஏராளமான ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும், காமெடியன்களும் கிரு கிருத்து நிற்கிறார்கள். மோடி – முதல்வன் அர்ஜுன் மாதிரி பண்ணிட்டாரேன்னு முழிக்குது கோடம்பாக்கம்..?