Connect with us
Cinemapettai

Cinemapettai

natarajan-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்.. அட்ரா சக்க!

சினிமாவை பொருத்தவரை என்னதான் கமர்சியல் படங்கள் வந்தாலும் அவ்வப்போது ஒரு சிலரின் வாழ்க்கை வரலாறு படங்கள் எதிர்பாராத வகையில் சூப்பர் ஹிட்டடித்து விடும். அந்த வகையில் சமீபத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் சூப்பர் வெற்றியை பெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக ஆஸ்திரேலிய தொடரில் களமிறங்கி அசத்திய நடராஜனின் வாழ்க்கை வரலாறு படத்தை தமிழில் படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிடலாம் என முடிவு செய்துள்ளார்களாம். மேலும் இந்த படத்தில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் சினிமா வாசிகள்.

natarajan-cinemapettai-01

natarajan-cinemapettai-01

சமீபத்தில் நடராஜனுடன் வீடியோ கால் பேசிய சிவகார்த்திகேயன் மற்றும் சதீஷ் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. மேலும் நடராஜனின் வாழ்க்கை பயணம் பற்றி அவர் பேசிய வீடியோ ரசிகர்களுக்கு செம இன்ஸ்பிரேஷன் ஆக அமைந்து விட்டதாம்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் விரைவில் தன்னுடைய எஸ்கே புரொடக்ஷன்ஸ் மூலம் நடராஜனின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்க அதிக ஆர்வமாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே தோனி மற்றும் சச்சின் போன்ற கிரிக்கெட்டில் 15,20 வருடங்களுக்கு மேலிருந்து சாதித்த பிறகு தான் அவர்களது பயொபிக் திரைப்படம் வெளிவந்த நிலையில், இந்திய அணிக்காக ஒரே ஒரு தொடரில் மட்டும் ஆடியுள்ள நடராஜனின் வாழ்க்கை வரலாறு படம் இவ்வளவு சீக்கிரமாக உருவாவது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தையே மெய்சிலிர்க்க வைத்துவிட்டதாம்.

Continue Reading
To Top