தமிழ் சினிமாவில் தற்போது அதிகப்படியான ரசிகர்கள் வைத்திருக்கும் நடிகர்கள்தான் விஜய் மற்றும் அஜீத் அவருக்கு அடுத்தபடியாக ஒரு குறிப்பிட்ட ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ளவர்கள்தான் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன். இவர்கள் இருவரும் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களாக உள்ளனர்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து நான்கு ஹிட் படங்களை கொடுத்த நடிகர்களைப் பற்றியும் அவர்களது எந்தெந்த படங்கள் வெற்றி அடைந்துள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.
தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் தற்போது வசூல் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே தொடர்ந்து வசூலை வாரி குவித்து வருகின்றன.
என்னதான் ஒருபக்கம் அரசல்புரசலாக குறை கூறினாலும் படத்தின் வெற்றியை தயாரிப்பாளர்கள் பலரும் உறுதி செய்துள்ளனர். அப்படி விஜய் நடிப்பில் தொடர்ந்து வெற்றியடைந்த 4 படங்கள் மெர்சல், சர்க்கார், பிகில் மற்றும் மாஸ்டர்.
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களின் பேராதரவை தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. அப்படி அஜித் குமார் நடிப்பில் தொடர்ந்து வெற்றியடைந்த 4 படங்கள் ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால் மற்றும் வேதாளம்.
விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்து கதாபாத்திரத்திலும் கலக்கி வரக்கூடிய ஒரே நடிகர் விஜய் சேதுபதி. எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் தனது திறமையின் மூலம் சிறப்பாக நடித்து விடுவார்.
அப்படி இவரது நடிப்பில் தொடர்ந்து வெற்றியான 4 படங்கள் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் மற்றும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.
சிவகார்த்திகேயன்
நடிகர் விஜய்க்கு அடுத்தபடியாக குழந்தைகள் ரசிக்கக் கூடிய அளவிற்கு காமெடி மூலம் பிரபலமடைந்தவர் சிவகார்த்திகேயன். இவர் சினிமாவின் ஆரம்ப காலத்தில் ஒரு சில வெற்றிகள் கொடுத்தார்.
சமீபகாலமாக தொடர் தோல்வி படங்களை மட்டுமே கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் ஒரு காலத்தில் தொடர்ந்து 4 வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் மான் கராத்தே.
மேற்கண்ட அனைத்து நடிகர்களுமே தொடர்ந்து 4 வெற்றிப்படங்களை கொடுத்துள்ளனர். ஆனால் அதில் ஒரு சில படங்கள் தோல்வி தழுவியதாக பேசப்பட்டாலும் வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது ஆகவே சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகின.