விஜய்-அஜித் ரசிகர்கள் சண்டையின் விளைவுகள்- ஸ்ரீகாந்த் அதிரடி கருத்து

ajith-vijay-fightரோஜாக்கூட்டம், பூ, பார்த்திபன் கனவு ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருடைய நடிப்பில் விரைவில் சவுக்கார்பேட்டை, நம்பியார் ஆகிய படங்கள் வரவிருக்கின்றது.இந்நிலையில் நம் சினி உலகம் நேயர்களுக்காக ஸ்ரீகாந்த் பேட்டி கொடுக்கையில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் சண்டைக்குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இவர் கூறுகையில் ‘கண்டிப்பாக இவை மிகவும் கண்டிக்கத்தக்க விஷயம் தான், என் பெயரில் கூட போலி ஐடிக்களை வைத்து தவறான தகவல்களை பரப்பினர்.இதனால், தேவையில்லாத மனஸ்தாபம் ஏற்படுகின்றது, மேலும், அந்த உண்மையான ஐடி தானா என்று பார்த்து கமெண்ட் செய்யுங்கள், வார்த்தையை தவறாக விடாதீர்கள்.(சமீபத்தில் ஸ்ரீகாந்த் என்ற பெயரை ஒரு ஐடியில் அஜித், சிம்புவை ஒரு போலி ஆசாமி திட்டினார்).இதுக்குறித்து சம்மந்தப்பட்ட நடிகர்களே விரைவில் ஏதாவது முடிவு எடுக்க வேண்டும், சமூக வலைத்தளங்களை ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கு மட்டும் பயன்படுத்துங்கள்’ என்று கூறியுள்ளார்.

Comments

comments